கடந்த ஆண்டு டிக்டாக் செயலி உள்ளிட்ட சீனாவின் மொபைல் போன் அப்ளிகேஷன்கள் அனைத்தும் இந்தியாவில் தடைவிதிக்கப்பட்டதை தொடர்ந்து,பிரபல மொபைல் கேம் ஆன பப்ஜி விளையாட்டும் இந்தியாவில் தடை செய்யப்பட்டது.
இதனால்,பப்ஜிக்கு மாற்றாக ஏதேனும் புதிய மல்டி பிளேயர் கேம் வருமா? என பப்ஜி ரசிகர்கள் காத்திருந்தனர்.
இதனையடுத்து,தென் கொரியாவின் வீடியோ கேம் டெவலப்பரான கிராப்டன்,பப்ஜி மொபைல் கேமை போன்று,பேட்டில்கிரவுண்ட் மொபைல் இந்தியா (Battlegrounds Mobile India) என்ற கேமை வடிவமைத்துள்ளதாகவும், விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளதாகவும் அறிவித்தது.
அதன்படி,கடந்த மே 18 ஆம் தேதியிலிருந்து,கூகுள் பிளே-ஸ்டோரில்,பேட்டில்கிரவுண்ட் மொபைல் இந்தியா செயலிக்கான முன்பதிவும் தொடங்கி,20 மில்லியன் பதிவுகளை பெற்றது.ஆனால்,கேமின் வெளியீட்டு தேதி குறிப்பிடப்படவில்லை.
இதன்காரணமாக,இந்தியாவில் பப்ஜி ரசிகர்கள்,பேட்டில்கிரவுண்ட் மொபைல் இந்தியா கேம் வெளியீட்டு தேதி குறித்து,மிகவும் உற்சாகமாக மற்றும் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.
இதனால்,அதன் டெவலப்பர்கள்,ஒரு புதிய டீஸர் வெளியிட்டு பேட்டில்கிரவுண்ட் மொபைல் இந்தியாவின் வெளியீட்டு தேதிகளை மறைமுகமாக வெளிப்படுத்தினர்.
இந்நிலையில்,பேட்டில்கிரவுண்ட் மொபைல் இந்தியா ஜூன் 18 ம் தேதி வெளியிடப்படும் என புதிய தகவல் வெளியாகியுள்ளது.
தஞ்சாவூர் : மாவட்டம், செங்கிப்பட்டி பகுதியில் உள்ள நாகப்பட்டினம்-திருச்சி நெடுஞ்சாலையில் மே 21, 2025 அன்று இரவு 8 மணியளவில்…
சத்தீஸ்கர்: மாநிலத்தில் மாவோயிஸ்ட் இயக்கத்தின் முக்கிய தலைவர் நம்பல கேசவ் ராவ் என்ற பசவராஜு உட்பட 27 மாவோயிஸ்டுகள் பாதுகாப்பு…
சென்னை : தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வரும் நிலையில், அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான…
மும்பை : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், டெல்லி அணியும் மோதியது. முதலில் பேட்டிங் செய்த மும்பை…
மும்பை : முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி, சூர்யாவின் 73 ரன்களின் புயல் இன்னிங்ஸின் அடிப்படையில் டெல்லி அணிக்கு…
சென்னை : விஞ்ஞானியும், முன்னாள் குடியரசு தலைவருமான அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிகர் தனுஷ் நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக…