ஏழைகளுக்கு கடன் தேவை இல்லை,பணம் தான் என்று ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் தற்பொழுது வரை 85,940 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், தற்பொழுது வரை 2,752 பேர் உயிரிழந்து உள்ளனர். இவர்களில் உயிரிழந்தவர்கள் தவிர 30,153 பேர் குணமாகி வீடு திரும்பியுமுள்ளனர்.எனவே ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதனால் மக்கள் அனைவரும் வீட்டிலே முடங்கி உள்ளனர்.
தற்போது 3- ஆம் கட்ட ஊரடங்கு நாடு முழுவதும் அமலில் உள்ளது.இதனிடையே பிரதமர் மோடி நான்காவது கட்ட ஊரடங்கை அறிவித்தார்.இது முற்றிலும் வேறுபட்டதாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.மேலும் ரூ.20 லட்சம் கோடிக்கு சிறப்பு திட்டம் ஒன்றை அறிவித்தார்.இந்த திட்டம் தொடர்பான அறிவிப்பினை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிடுவார் என்றும் தெரிவித்தார்.அதன்படி , நிர்மலா சீதாராமன் கடந்த புதன்கிழமை முதல் தொடர்ந்து புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், நேரடியாக பணம் நிவாரணமாக தாருங்கள். கடன் என்பது நிவாரணம் அல்ல , பணத்தை நேரடியாக கொடுப்பது தற்போதைய தீர்வு ஆகும். நாட்டு மக்களுக்கு தற்போது பணம் தான் தேவை என்பதால் நேரடியாக அவர்களுக்கு பணம் கிடைக்கும் வகையில் ரூ.20 லட்சம் கோடி திட்டத்தை பிரதமர் மோடி மாற்ற வேண்டும். ஏழைகள், விவசாயிகள் தான் நாட்டின் எதிர்காலம் என்பதை அரசு புரிந்துகொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…
இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…