மோடி அறிவித்த ரூ.20 லட்சம் கோடி சிறப்பு பொருளாதார தொகுப்பு விவரங்களை இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
நேற்று முன்தினம் அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் காணொளி மூலமாக மோடி ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் நேற்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களிடம் தொலைக்காட்சியில் மோடி உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்காக 20 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்படுவதாகவும், இந்த நிதித் தொகுப்பு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஏறத்தாழ 10 சதவீதம் என்ற அளவுக்கு பெரிய நிதித் தொகுப்பாக இருக்கும். சிறு, குறு தொழில் முனைவோர், விவசாயிகள் உள்ளிட்ட பல துறையினருக்கும் இந்த நிதி ஊக்கமளிக்கும் என மோடி கூறினார்.
இந்நிலையில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்காக மோடி அறிவித்த ரூ.20 லட்சம் கோடி சிறப்பு பொருளாதார தொகுப்பு விவரங்களை இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பார் என்று நேற்று மோடி கூறினார். கடந்த மார்ச் மாதம் ரூ .1.7 லட்சம் கோடி நிவாரண திட்டங்களை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். ஆனால் இந்த நிதி போதாது என்று அப்போது விமர்சிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மான்செஸ்டர் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில்…
சென்னை : இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடித்த ‘தலைவன் தலைவி’ திரைப்படம், கடந்த…
சென்னை : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, ககன்யான் திட்டத்தின் கீழ் 2027 மார்ச் மாதத்தில் முதல் மனிதர்களை…
சென்னை :தேசிய முற்போக்கு திராவிட கழக (தேமுதிக) இளைஞரணி செயலாளர் விஜய பிரபாகரன், 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி…
டெல்லி : ஜூலை 28-ஆம் தேதி பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடாளுமன்ற…
நெல்லை : ஜூலை 27-ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை பகுதியில், பட்டியலினத்தைச் சேர்ந்த மென்பொறியாளரான கவின் (வயது 27)…