கொரோனா ஊரடங்கு காரணமாக மூடப்பட்டிருந்த ஆந்திர திரையரங்குகள் 3 மாதங்களுக்கு பின் இன்று 50% வாடிக்கையாளர்களுடன் திறக்கப்படுகிறது.
ஆந்திர மாநிலத்தில் கொரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக கடந்த மூன்று மாதங்களாக திரையரங்குகள் மூடப்பட்ட நிலையிலேயே இருந்தது. இந்நிலையில், ஆந்திராவில் கொரோனா பரவல் குறைந்ததால் கடந்த ஜூலை 8-ஆம் தேதி முதல் 50 சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்குகளை இயக்கலாம் என ஆந்திர அரசு அனுமதி வழங்கியது.
ஆனால் 50 சதவீத பார்வையாளர்கள் மட்டும் திரையரங்குக்கு வந்தால் மிகுந்த நஷ்டம் ஏற்படும் என திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் திரைப்பட விநியோகஸ்தர் சங்கங்கள் இடையே தகராறு ஏற்பட்டதால் ஜூலை 8-ஆம் தேதி திரையரங்குகள் திறக்கப்படவில்லை.
தற்போது மீண்டும் இன்று முதல் ஆந்திர மாநிலம் முழுவதிலும் சி சென்டர்களில் உள்ள தியேட்டர்கள் இயங்குவதற்கு ஆந்திர அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் 50 சதவீத பார்வையாளர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டுமெனவும், திரையரங்குக்கு வரக்கூடிய பார்வையாளர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் எனவும் ஆந்திர அரசு வலியுறுத்தியுள்ளது .
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…
சென்னை : 2026 தேர்தலில் முதல்வர் வேட்பாளர் விஜய் என்று தவெக அறிவித்துள்ளது. 2026-ல் தவெக தலைமையில் தான் கூட்டணி…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழு கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன், பர்மிங்ஹாம்) இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்,…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…
திருப்பூர் : மாவட்டம், அவிநாசி அருகே கைகாட்டிபுதூர் பகுதியைச் சேர்ந்த ரிதன்யா (வயது 27), வரதட்சணை கொடுமை காரணமாக ஜூன்…