டிக் டாக்கின் தாய் நிறுவனமான பைட் டான்ஸ், இந்தியாவில் பணிபுரிந்து வரும் ஊழியர்கள் எண்ணிக்கையை குறைக்க முடிவெடுத்துள்ளது.
இந்தியாவின் இறையான்மை, ஒருமைப்பாடு, பாதுகாப்பு, அரசு மற்றும் பொது ஒழுங்கின் பாதுகாப்புக்கு பங்கம் ஏற்படுத்துவதாக கூறி, தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவு 69-ஏ இன் கீழ் பல்வேறு சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. இதுகுறித்து, இந்திய அரசு கூறுகையில், மக்களின் தகவல்களை சீன நிறுவனங்கள் வியாபார நோக்கத்திற்காக தவறான முறையில் பயன்படுத்துவதாக குற்றம் சாட்டியது நிலையில், கடந்த ஆண்டு இறுதிவரை 250க்கும் மேற்பட்ட சீன செயலிகள் தடை செய்யப்பட்டது.
இந்திய வாடிக்கையாளர்களின் விவரங்கள் சேகரிப்பு அவற்றை பயன்படுத்தும் முறைகள் உள்ளிட்டவற்றை தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது. இதுகுறித்து சீன நிறுவனங்கள் அளித்துள்ள பதில்கள் திருப்தி அளிக்கக்கூடிய வகையில் இல்லாததால், மத்திய அரசு 59 செயலிகளை நிரந்தர தடை விதித்து அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் டிக் டாக் செயலி மீண்டும் எப்போது செயல்படும் என்று நிச்சயிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் பணிபுரிந்து வரும் ஊழியர்கள் எண்ணிக்கையை குறைக்க டிக் டாக்கின் தாய் நிறுவனமான பைட் டான்ஸ் முடிவெடுத்துள்ளது.
இது குறித்து ஊழியர்களுக்கு அனுப்பப்பட்டிருக்கும் செய்தியில், டிக்டாக் மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வருவது எப்போது என்பது குறித்து கூற இயலாத சூழல் உள்ளது. இந்தியாவில் எங்களின் ஊழியர்களின் எண்ணிக்கையை குறைப்பது தவிர வேறு வழியில்லை. பிசினஸ் நடைபெறாத சூழலிலும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு 6 மாதங்களுக்கும் மேலாக ஆதரவளித்தோம்.
ஆனால் இந்தியாவில் மில்லியன் கணக்கிலான பயனர்களுக்கும், நூற்றுக்கணக்கான கலைஞர்கள், கதை சொல்பவர்கள் மற்றும் கல்வியாளர்கள் மீண்டும் எங்களது இயக்கத்தை தொடங்குவதை எதிர்நோக்கி இருக்கிறோம். அவசிய தேவையில் உள்ளவர்களை மட்டும் வேலையில் தக்கவைத்துக் கொள்ள முடிவெடுத்துள்ளனர் என இந்த நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நானே போபாக…
சென்னை : இன்று (மே 3) முதல் மே 5 வரையில் சென்னை காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக…