இன்று பீகார் முதற்கட்ட சட்டசபைத் தேர்தல் வாக்குபதிவு நடைபெறுகிறது. பாதுக்காப்பு பணியில் 30,000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
நாடு முழுவதும் கொரோனாப் பரவலுக்கு எதிரான தடுப்பு மற்றும் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இச்சூழலில் பீகார் சட்டசபை தேர்தல் 3 கட்டங்களாக நடைபெறுகிறது.இன்று முதற்கட்ட வாக்கு பதிவு காலை 7 மணிக்கு தொடங்குகிறது.
பீகாரில்71 தொகுதிகளுக்கு நடைபெறும் முதற்கட்ட வாக்குபதிவில் 114 பெண்கள் உள்பட 1,066 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.முதற்கட்ட வாக்கு பதிவில் முதலமைச்சர் நிதிஷ் குமார் அமைச்சரவையின் 6 அமைச்சர்களின் எதிர்கால அரசியல் நிர்ணக்கப்படுகிறது.
பீகாரில் 3 கட்டங்களாக வாக்கு பதிவு நடைபெறுவதால் பாதுகாப்பு பணிக்காக மத்திய அரசு 30,000 மத்திய பாதுகாப்பு படை வீரர்களை குவித்துள்ளது.மேலும் மாவோயிஸ்டுகள் அதிக நடமாட்டமுள்ள தொகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தேர்தலில் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் பல்வேறு விதிமுறைகளும் வகுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டு உள்ளது.அதன்படி 7 லட்சம் சேனிடைசர்கள், 46 லட்சம் முக கவசங்கள், 6 லட்சம் தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள், 6.7 லட்சம் முக கவசங்கள், 23 லட்சம் ஜோடி கையுறைகள் ஆகியவைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பீகாரில் சுமார் 2 கோடி பொதுமக்கள் வாக்களிக்க உள்ளனர் என்பது குறிப்பிடக்கத்தது. மேலும் 80 வயது கடந்த பீகார் மூத்த குடிமக்கள், மாற்று திறனாளிகள் வாக்களிக்க வசதியாக தபால் ஓட்டும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. தபால் ஓட்டு மூலம் 52 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
திருப்பூர் : மாவட்டம் அவிநாசியில் புதுமணப் பெண் ரிதன்யா (27) தற்கொலை செய்து கொண்ட வழக்கில், கைது செய்யப்பட்ட அவரது…
சென்னை : பிரதமர் நரேந்திர மோடி, 2025 ஜூலை 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் இரண்டு நாள் பயணமாக…
லண்டன் : இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று…
குஜராத் : மாநிலத்தில் ஆனந்த் மற்றும் வதோதரா மாவட்டங்களை இணைக்கும் மஹிசாகர் ஆற்றின் மீது அமைந்த காம்பிரா-முக்பூர் பாலத்தின் ஒரு…
சென்னை : தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் (TNDALU), 2025-2026 கல்வியாண்டிற்கான 3 ஆண்டு எல்.எல்.பி. (LL.B) சட்டப்படிப்பு…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று (11-07-2025) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…