தெலுங்கு திரைத்துறையில் சோகம் ..! ராமோஜி குழும நிறுவனர் ராமோஜி ராவ் காலமானார்!!

ராமோஜி ராவ்: பிரபல ஊடக அதிபரும், திரைப்பட தயாரிப்பாளருமான ராமோஜி ராவ் கடந்த 5ம் தேதி மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு உடனடியாக இவரை ஹைதராபாத்தில் இருக்கும்

RIP Ramoji Rao

ராமோஜி ராவ்:பிரபல ஊடக அதிபரும், திரைப்பட தயாரிப்பாளருமான ராமோஜி ராவ் கடந்த 5ம் தேதி மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு உடனடியாக இவரை ஹைதராபாத்தில் இருக்கும் ஸ்டார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு இவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று அதிகாலை 4.50 மணி அளவில் காலமானார்.

அவரது உடல் ராமோஜி ராவ் பிலிம்சிட்டியில் உள்ள அவரது இல்லத்திற்கு இறுதி சடங்கிற்காக கொண்டு செல்லப்படுகிறது. மேலும், ராமோஜி ராவ் மறைவு அவரது  குடும்பத்தினர் மட்டுமில்லாமல் திரையுலகினர், அரசியல் கட்சியினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.மேலும், பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.