பி.எஸ்.என்.எல் நிறுவனம் மாத சலுகை முறையில் ரூ.299, ரூ.491 விலையில் இரண்டு புதிய சலுகைகளை அறிவித்துள்ளது. இந்த சலுகை புதிதாக பிராட்பேண்ட் இணைப்பு மற்றும் பிராட்பேண்ட சேவையை பெற நினைக்கும் லேண்ட்லைன் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ரூ.299 பிராட்பேண்ட் சலுகையில் 50GB டேட்டா நொடிக்கு 20Mb வேகத்தில் இணைய சேவை வழங்கப்படுகிறது. 50GB டேட்டா தீர்ந்தவுடன் டேட்டா வேகம் 1Mb-ஆக குறைக்கப்பட்டுவிடும்.
மேலும் அனைத்து நெட்வொர்க் எண்களுக்கும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் வழங்கப்படுகிறது. இந்த சலுகை 6 மாத வேலிடிட்டி கொண்டிருக்கிறது. அதன் பின்னர் ரூ.399 சலுகையை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தலாம் இதில் தினமும் 2GB டேட்டா நொடிக்கு 8Mb வேகத்தில் வழங்கப்படுகிறது.
அதை தொடர்ந்து ரூ.491 பிராட்பேண்ட் சலுகையில் 120GB டேட்டா நொடிக்கு 20Mb வேகத்தில் வழங்கப்படுகிறது. முந்தைய சலுகையை போன்றே டேட்டா தீர்ந்ததும் நொடிக்கு 1Mb-ஆக குறைக்கப்படும். மேலும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் வழங்கப்படுகிறது. இந்த சலுகை 6 மாதத்திற்கு வழங்கப்படுகிறது. அதன் பின்னர் வாடிக்கையாளர்கள் ரூ.499 சலுகையை பயன்படுத்தலாம். இதில் தினமும் 3GB டேட்டா வழங்கப்படுகிறது.
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : இந்தியாவின் எல்லையோர குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்துள்ளது. இதனை இந்திய ராணுவம் பெரும்பாலும் முறியடித்தாலும்,…
டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…
டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…