உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே 9-வது நாளாக போர் நீடித்து வரும் நிலையில், உக்ரைன் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி, வெளியுறவுத்துறை அமைச்சர், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். உக்ரைனில் போர் தீவிரமடைந்து உள்ள நிலையில், உக்ரைன் விவகாரம் தொடர்பாக அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து மூத்த அமைச்சர்கள், வெளியுறவுத் துறை அதிகாரிகளைக் கொண்ட உயர்நிலைக் குழுவுடன் பிரதமர் மோடி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
இதனிடையே, கடுமையான போர் நிலவி வரும் நிலையில், உக்ரைனில் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் உட்பட சுமார் 40 ஆயிரம் இந்தியர்கள் இருப்பதாக கூறப்படுகிறது. போர் நடைபெறும் பகுதியில் சிக்கித் தவிக்கும் இவர்களை மீட்க, மத்தியஅரசு தொடர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்த மீட்புப் பணிக்கு ‘ஆபரேஷன் கங்கா’ என பெயரிடப்பட்டுள்ளது.
உக்ரைனில் இருக்கும் இந்தியர்கள் அதன் அண்டை நாடுகளுக்கு சாலை மார்க்கமாக அழைக்கப்பட்டு, பிறகு அங்கிருந்து விமானங்கள் மூலம் தாயகம் அழைத்து வரப்படுகின்றனர். மேலும், உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை 130 ரஷ்ய பேருந்துகள் மூலம் மீட்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.கார்கிவ், சுமியில் சிக்கியுள்ள இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினரை ரஷ்ய பேருந்துகள் மூலம் மீட்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
சென்னை : நேற்று முதல் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திர வெயில் காலம் ஆரம்பமாகியது என வானிலை ஆய்வு…
காஷ்மீர் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததை…
மயிலாடுதுறை : நேற்று (மே 4) மயிலாடுதுறையில் திமுக சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக எம்.பி…
சென்னை : நேற்று (மே 4) இந்தியா முழுவதும் நீட் (NEET) நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இது இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…