hamas, Meenakshi Lekhi [ file image]
இஸ்ரேல் எல்லையில் உள்ள காசா முனையில் இருந்து ஹமாஸ் அமைப்பினர், இஸ்ரேலுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர். காசாவில் ஹமாஸ் தனியாக ஆட்சி அதிகாரம் செய்து வருகிறது. இதனால், ஆக்கிரமைப்பு தொடர்பாக பாலஸ்தீனம்- இஸ்ரேல் இடையேயான பிரச்சனை நீண்ட காலமாக இருந்து வருகிறது.
இந்த சூழலில், இஸ்ரேல் மீது கடந்த அக்டோபர் 7ம் ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் இருந்து, இருதரப்பு மக்களின் வாழ்க்கையே சிதைந்து விட்டது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தால் தடை செய்யப்பட்டுள்ள பயங்கரவாத அமைப்பான ஹமாஸ் அமைப்பினர் தாக்குதலை தொடங்கிய நிலையில், இதற்கு பதிலடி கொடுக்கும் வகையிலும் இஸ்ரேல் தனது தாக்குதலை தீவிரப்படுத்தி இதுவரை தொடர்ந்து வருகிறது.
அந்தவகையில், கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினர் இடையேயான போர் 64 வது நாளான இன்றும் நடைபெற்று வந்தது. இந்த போரில் முதலில் ஹாமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் சுமார் 1400 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில், பதிலுக்கு இஸ்ரேல் ராணுவம் ஹமாஸ் அமைப்பினர் அதிகம் இருக்கும் காசா நகரில் நடத்திய தாக்குதல் சுமார் 14 ஆயிரம் பேர் உயிரிழந்தனர் என தகவல்கள் வெளியாகின.
அதுமட்டுமில்லாமல், பெண்கள், பச்சிளம் குழந்தைகள் மற்றும் முதியோர் என பலரை ஹமாஸ் அமைப்பினர் பிணைக்கைதிகளாக பிடித்து செல்வதாக இஸ்ரேல் குற்றசாட்டியுள்ளது. இதனால் ஹமாஸ் அமைப்பினரை பயங்கரவாத அமைப்பு என அறிவிக்க வேண்டும் என உலக நாடுகளை இஸ்ரேல் வற்புறுத்தி வருகிறது.
ஹமாஸ் அமைப்பினர் தாக்குதலுக்கு இந்தியாவும் கண்டனம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், இந்தியாவில் ஹமாஸ் அமைப்புக்கு தடை விதிக்கப்படுமா என நாடாளுமன்ற மக்களவையில் கேரள எம்பி கேள்வி எழுப்பியிருந்தார். கேரள எம்பி சுதாகரனின் கேள்விக்கு வெளியுறவுத்துறை இணை அமைச்சர் மீனாட்சி லேகி சார்பில் எழுத்துபூர்வாக பதில் அளித்ததாகவும், கடிதம் ஒன்று இணையத்தில் வெளியானது.
அந்த கடிதத்தில், ஒரு அமைப்பு சட்டவிரோத நடவடிக்கை தடுப்பு சட்டத்தின் கீழ் உள்ளதா என்பதை அந்தந்த துறை சார்ந்து முடிவெடுக்க வேண்டும் என பதில் கூறியிருந்தார். இதையடுத்து, மீனாட்சி லேகி சார்பில் வெளியானதாக கூறப்பட்ட அந்த கடிதத்தை மேற்கோள்காட்டி, இந்தியாவில் ஹமாஸ் அமைப்பை தடை செய்யும் முன்மொழிவு ஏதேனும் உள்ளதா? என எக்ஸ் தளத்தில் ஒருவர் இணையமைச்சர் மீனாட்சி லெகியை டேக் செய்து கேட்டிருந்தார்.
இதற்கு தனது எக்ஸ் தள பக்கத்தில் பதில் அளித்த மீனாட்சி லெகி, உங்களுக்கு தவறாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹமாஸ் அமைப்பு குறித்த பதில் எனது ஒப்புதலின்றி வெளியாகியுள்ளது. ஹமாஸ் அமைப்பு குறித்த எந்த பதிலும் நான் கையெழுத்துயிடவில்லை. ஹமாஸ் அமைப்புக்கு தடை என எந்த ஒப்புதலும் நான் அளிக்கவில்லை என்றார்.
எனவே, நாடாளுமன்றத்தில் உறுப்பினர் கேள்விக்கு மத்திய அமைச்சர் ஒப்புதல் இல்லாமல் எழுத்துப்பூர்வமான பதில் தரப்படுகின்றனவா? என கேள்வி எழுந்துள்ளது. ஹமாஸ் அமைப்பு குறித்து கேரளா எம்பி எழுப்பிய கேள்விக்கு மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் மீனாட்சி லேகி பெயரில் எழுத்துப்பூர்வமாக பதில் வழங்கப்பட்ட நிலையில், இந்த கேள்விக்கான எந்த கோப்பிலும் தான் கையொப்பமிடவில்லை என விளக்கம் அளித்துள்ளார்.
மேலும், இந்த பிரச்சனை சர்ச்சைக்குரிய விஷயமாக பார்க்கிறோம் என மத்திய அரசு அதிகாரிகள் கூறியுள்ளனர்.
மும்பை : டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் நினைவாக வான்கடே மைதானத்தில்…
சென்னை : வெற்றிமாறனின் விடுதலை பாகம் 2 படத்தில் கடைசியாக நடித்த நடிகர் சூரி, அடுத்து இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜின்…
சென்னை : சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள டிடி நெக்ஸ்ட் லெவல், சூரியின் மாமன், யோகிபாபுவின் ஜோரா கைய தட்டுங்க ஆகிய…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் மோதல் காரணமாக ஒரு வார காலம் ஐபிஎல் போட்டிகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், மே 17 முதல் மீண்டும்…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பெங்களூரு : இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட 18-ஆவது ஐ.பி.எல் சீசன் ஒரு வார…