WB CM Mamata Banarjee [Image source : PTI]
விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூபாய் 5 லட்சம் இழப்பீடு தொகை அளிக்கப்படும் என மே.வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி அறிவித்துள்ளார்.
ஒடிசாவில் நேற்று பாலசோர் மாவட்டத்தில் மூன்று ரயில்கள் ஒன்றுக்கொன்று மோதி விபத்துக்குள்ளாகியது. ஒடிசாவின் பஹானாகா ரயில் நிலையம் அருகே நேற்று மேற்கு வங்க மாநிலம் ஷாலிமார் முதல் – சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ், பெங்களூரு-ஹவுரா எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில் ஆகிய 3 ரயில்கள் விபத்துக்குள்ளாகி பெரும் உயிர்சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த ரயில் விபத்தில் சிக்கி இதுவரை 260 பேர் உயிரிழந்ததாகவும், 900க்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
ரயில் விபத்து நடந்த இடத்திற்கு மத்திய அமைச்சர்கள், ஒடிசா மாநில முதல்வர், தமிழக அமைச்சர்கள் என பலர் வந்து மீட்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டுள்ளனர். இதனை தொடர்ந்து, தற்போது, மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பேனர்ஜி ஒடிசா மாநிலத்திற்கு தனி விமானம் மூலம் வந்து விபத்து நடந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
அதன் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய மம்தா பேனர்ஜி, ரயில் விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு மத்திய ரயில்வேத்துறை 10 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்குகிறது. நாங்கள் எங்கள் மாநில மக்களுக்கு (மேற்கு வங்கம்) தலா ரூ.5 லட்சம் வழங்குவோம். எனவும், பணி முடியும் வரை ரயில்வே மற்றும் ஒடிசா அரசுடன் ஒத்துழைத்து எங்கள் மாநில அரசு பணியாற்றும் எனவும் மம்தா பேனர்ஜி குறிப்பிட்டுள்ளார்.
லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…
வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கை அடைய…
பர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன்), இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்…
தூத்துக்குடி : சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஜூலை 6, 2025 காலை 10:10 மணிக்கு புறப்பட இருந்த ஸ்பைஸ்ஜெட்…