கொரோனா வைரசுடன் வாழ நாம் பழகிக் கொள்ள வேண்டும். தற்போது பின்பற்றி வரும் வாழ்க்கை முறையாக மாற்றிக்கொள்ள வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை இணை செயலர் லாவ் அகர்வால் தெரிவித்தார்.
இந்தியாவில், கொரோனா வைரஸ் குறித்தும், பாதிப்பு , உயிரிழப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தினமும் மத்திய சுகாதாரத்துறை செய்தியாளர்களை சந்தித்து பேசி வருகின்றனர்.இந்நிலையில், இன்று டெல்லியில் மத்திய சுகாதாரத்துறை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர்.
அப்போது, பேசிய மத்திய சுகாதாரத்துறை இணை செயலர் லாவ் அகர்வால், கடந்த 24 மணி நேரத்தில் 3,390 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாகவும், கொரோனாவிலிருந்து குணமடைவோர் விகிதம் தற்போது 29.36% ஆக உள்ளது. புதிதாக 216 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு ஏதும் பதிவாகவில்லை என தெரிவித்தார்.
மேலும், கொரோனா வைரசுடன் வாழ நாம் பழகிக் கொள்ள வேண்டும். தற்போது பின்பற்றி வரும் வாழ்க்கை முறையாக மாற்றிக்கொள்ள வேண்டும். நம்முன்பு மிகப்பெரிய சவால் உள்ளது. அனைவரின் ஒத்துழைப்பும் தேவை என லாவ் அகர்வால் தெரிவித்தார்.
தூத்துக்குடி : பனிமய மாதா பேராலயத்தின் 443-வது ஆண்டு திருவிழா நேற்று கொடி பவனியுடன் தொடங்கி, இன்று (ஜூலை 26)…
தூத்துக்குடி : தூத்துக்குடி விமான நிலையத்தின் புதிய முனையம் இன்று (ஜூலை 26, 2025) இரவு 8 மணிக்கு பிரதமர்…
சென்னை : அன்புமணியின் 'தமிழக உரிமை மீட்பு பயணம்' திட்டமிட்டபடி தொடரும் என்று டிஜிபி அலுவலகம் விளக்கமளித்துள்ளது. முன்னதாக, அன்புமணி…
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கத்தில் கடந்த ஜூலை 12 அன்று 10 வயது சிறுமி பள்ளி முடிந்து…
தூத்துக்குடி : 2 நாள் பயணமாக பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகிறார். தற்போது மாலத்தீவில் உள்ள பிரதமர் அங்கிருந்து…
சென்னை : அன்புமணியின் நடைப்பயணத்துக்கு தடை விதித்து டிஜிபி உத்தரவிட்ட நிலையில், அனுமதி கோரி இன்று சென்னை உயர் நீதிமன்றத்தை…