மேற்கு வங்கத்தில், இன்று காலை 9:31 மணிவரை 6 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
மேற்கு வங்கத்தில் சட்டமன்ற தேர்தல் 8 கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று எட்டாம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. 35 தொகுதிகளில் இன்று எட்டாம் கட்ட தேர்தல் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நடைபெற்று வருகிறது.
இந்த இறுதி கட்ட தேர்தலில், 283 வாக்காளர்கள் களத்தில் உள்ள நிலையில், இவர்களது வெற்றி, தோல்வியை 84,77,728 வாக்காளர்கள் தீர்மானிக்கவுள்ளனர். 43,55,835 ஆண்கள், 41,21,735 பெண்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தில் 158 பேர் வாக்களிக்க தகுதியுடையவர்கள் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மொத்தம் 11,860 வாக்குச்சாவடிகளில் காலை மணிக்கே வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், 6:30 மணிக்கு நிறைவுபெறும். தொடர்ந்து வாக்குப்பதிவு நடைபெற்று வருகின்ற நிலையில், இன்று காலை 9:31 மணிவரை 6 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
மான்செஸ்டர் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில்…
சென்னை : இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடித்த ‘தலைவன் தலைவி’ திரைப்படம், கடந்த…
சென்னை : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, ககன்யான் திட்டத்தின் கீழ் 2027 மார்ச் மாதத்தில் முதல் மனிதர்களை…
சென்னை :தேசிய முற்போக்கு திராவிட கழக (தேமுதிக) இளைஞரணி செயலாளர் விஜய பிரபாகரன், 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி…
டெல்லி : ஜூலை 28-ஆம் தேதி பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடாளுமன்ற…
நெல்லை : ஜூலை 27-ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை பகுதியில், பட்டியலினத்தைச் சேர்ந்த மென்பொறியாளரான கவின் (வயது 27)…