Congress leader G Parameshwara.(AP File Photo)
முதல்வரை தேர்ந்தெடுப்பதில் எந்த குழப்பமும் இல்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவர் பரமேஸ்வரா பேட்டி.
கர்நாடகாவில் முதலமைச்சரை தேர்ந்தெடுப்பதில் எந்த குழப்பமும் இல்லை என்று முன்னாள் கர்நாடக துணை முதல்வர் தெரிவித்துள்ளார். முதல்வர் யார் என்பது குறித்து இன்று அல்லது நாளைக்குள் வெளியாகும் என முன்னாள் கர்நாடக துணை முதல்வர் பரமேஸ்வரா பேட்டியளித்துள்ளார்.
காங்கிரஸ் உயர்மட்ட குழு முடிவு செய்து, என்னை ஆட்சி நடத்த சொன்னால் நான் பொறுப்பேற்க தயராக இருக்கிறேன் எனவும் கர்நாடக காங்கிரஸ் மூத்த தலைவர் பரமேஸ்வரா கருத்து தெரிவித்திருந்தார். கர்நாடகாவில் காங்கிரஸ் வென்றுள்ள நிலையில், முதலவரை தேர்ந்தெடுப்பதில் இழுபறி நீடித்து வருகிறது. கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா, காங்கிரஸ் மாநில தலைவர் டிகே சிவகுமார் இடையே முதல்வர் பதவிக்கு போட்டி நிலவி வருகிறது.
இதனிடையே, கர்நாடகா முதல்வர் யார் என்று தேர்ந்தெடுப்பதில் நீடிக்கும் இழுபறி பிரச்சனையை தீர்த்து வைக்க காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, சித்தராமையா மற்றும் டி.கே. சிவகுமார் ஆகியோருடன் இன்று அடுத்தடுத்து தனித்தனியாக ஆலோசனை நடத்துகிறார். முதலமைச்சர் போட்டியில் உள்ள இரு தலைவர்களும் ராகுலை சந்தித்து பேசும் நிலையில், முதல்வர் யார் என்பது இன்று இறுதியாக வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வாஷிங்டன் : ஜூலை 30, 2025: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 20…
திருநெல்வேலி : மாவட்டம், பாளையங்கோட்டை அருகே கே.டி.சி. நகரில் நேற்று (ஜூலை 28, 2025) ஐ.டி. ஊழியர் கவின் செல்வகணேஷ்…
ஸ்ரீஹரிகோட்டா : இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ மற்றும் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா இணைந்து உருவாக்கிய…
மான்செஸ்டர் : இந்தியா-இங்கிலாந்து நான்காவது டெஸ்ட் போட்டி (ஜூலை 27, 2025) ட்ராவில் முடிந்த பிறகு, இந்திய அணியின் பயிற்சியாளர்…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று (30-07-2025) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால்…
திருநெல்வேலி : மாவட்டம், ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த கவின் செல்வ கணேஷ் (வயது 27), சென்னையில் பிரபல ஐ.டி. நிறுவனமான டி.சி.எஸ்-இல்…