டெல்லியில் புதிய டிஜிபியை தேர்வு செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் தொடங்கியுள்ளது.
தமிழகத்தின் 29-வது சட்ட ஒழுங்கு டிஜிபி-யான திரிபாதி அவர்களின் பதவிக்காலம் முடிவடையும் நிலையில், அவர் வரும் 30ஆம் தேதியுடன் ஓய்வு பெற உள்ளார். இந்நிலையில், சீனியாரிட்டி அடிப்படையில் தான் டிஜிபி தேர்தெடுக்கபட வேண்டும் என்பது விதி. அதனடிப்படையில், திரிபாதிக்கு அடுத்த சீனியாரிட்டி பட்டியலில், 1987-ஆம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரிகளான எம்.கே.ஜா, சைலேந்திரபாபு, கரன்சின்ஹா, பிரதிப் வி பிலிப் ஆகியோர் உள்ளனர்.
இவர்களில் 60 வயதை எட்டியதால், எம்.கே.ஜா ஜூலை மாதமும், பிரதிப் வி பிலிப் செப்டம்பர் மாதமும் ஓய்வுபெறுகின்றர். சைலேந்திரபாபு மற்றும் கரன்சின்ஹா அடுத்த ஆண்டு ஒய்வு பெறுகின்றனர். அந்த வகையில், சைலேந்திரபாபு மற்றும் கரன்சின்ஹா இருவரும் சீனியாரிட்டி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளனர்.
இதனையடுத்து, சஞ்சய் அரோரா 1988-ஆம் ஆண்டு பணியில் சேர்ந்தவர். சென்னையில் உயர்பதிவிகளை வகித்த இவர், தற்போது காஷ்மீரில் மத்திய ரிசர்வ் போலீஸ் பிரிவில் சிறப்பு டிஜிபி-யாக பணியாற்றி வருகிறார். தற்போதைய நிலையில் ரயில்வே டிஜிபி சைலேந்திரபாபு, தீயணைப்புத்துறை டிஜிபி கரன்சின்ஹா மற்றும் காஷ்மீரில் மத்திய ரிசர்வ் போலீஸ் பிரிவில் சிறப்பு டிஜிபி-யாக பணியாற்றி வரும் சஞ்சய் அரோரா ஆகிய மூன்று பேரில் ஒருவர் தமிழ்நாடு புதிய டிஐபியாக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், டெல்லியில், தமிழகத்திற்கு புதிய டிஜிபியை தேர்வு செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் தொடங்கியுள்ளது. தமிழகத்தின் 30-வது டிஜிபி யார் என்பதை தேர்வு செய்ய, மத்திய தேர்வாணைய குழுவும், உள்துறை அமைச்சகமும் நடத்தும் இந்த ஆலோசனை கூட்டத்தில், தலைமை செயலாளர் இறையன்பு, உள்துறை கூடுதல் செயலாளர் எஸ்.கே.பிரபாகர் மற்றும் பல மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…