கணவரையும் கள்ளக்காதலியையும் தாக்கி காவல்நிலையத்தில் ஒப்படைத்த மனைவி!

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள மன்ச்சர்லா மாவட்டத்தில் கொத்தகொம்மகூடத்தை சேர்ந்தவர் லக்ஷ்மன் ஆவார் .இவரது மனைவி செளஜன்யா.
இவர்களுக்கு திருமணமாகி 9 ஆண்டுகளாகி 1 வயதில் மகன் உள்ளான்.இந்நிலையில் லக்ஷ்மனுக்கும் கரீம்நகர் மாவட்டம் வெங்கட்ராவ் நகரை சேர்ந்த அனுஷாவிற்கும் கள்ளக்காதல் இருந்து வந்துள்ளது.
இதையறிந்த சௌஜன்யா கணவனின் கள்ளக்காதலை பற்றி பெற்றோர்களிடம் கூறிய பிறகு லக்ஷ்மனும் அனுஷாவும் தொடர்பும் இல்லாமல் இருந்து வந்துள்ளன.
பின்னர் மீண்டும் அனுஷாவுடன் சேர்ந்து ஹைதராபாத் கூக்கட்பள்ளியில் வாடகைக்கு வீடு எடுத்து லக்ஷ்மன் அங்கேயே நிரந்தரமாக தங்கிவந்துள்ளார்.இதை அறிந்த சௌஜன்யா கூப்பிட்டும் அவர் வரவில்லை.
இதனால் கோபம் அடைந்த சௌஜன்யா அவருக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.ஆனாலும் லக்ஷ்மன் கண்டுகொள்ளவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த சௌஜன்யா நேற்று காலையில் அவர்கள் தங்கி இடத்திற்கு சென்று என்னை பற்றியும் மகனைப்பற்றியும் கவலைப்படாமல் இங்கு வந்து கூறியுள்ளார்.
பின்னர் அவரது கணவரையும் அவரின் கள்ளகாதலியையும் தாக்கி காவல்நிலையத்தில் ஒப்படைத்தார்.இந்நிலையில் அனுஷாவிற்கும் கடந்த 2013-ல் திருமணமாகி ஒரு மகன் இருப்பதாக என்று காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.
ஆனாலும் கணவரிடமிருந்து பிரிந்து லக்ஷ்மனுடன் வசித்து வந்துள்ளார்.மேலும்,சௌஜன்யா கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் இருவரையும் விசாரித்து வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025