அவனியாபுரம் ஜல்லிக்கட்டு….எதிரான மனு….தள்ளுபடி செய்து..! தலையிட உச்சநீதிமன்றம் மறுப்பு

Published by
kavitha
  • அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் ஓய்வுபெற்ற நீதிபதி கண்காணிப்பில் நடத்துவதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு.
  • மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் தலையிட முடியாது என்று மறுப்பு.

தமிழர் திருநாள் இன்று தமிழகம் மட்டுமல்லாமல் உலக முழுவதும் உள்ள தமிழ் நெஞ்சங்கள் வெகுச்சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.அதனின் மற்றொரு கட்டமான ஜல்லிக்கட்டு போட்டியானது அவனியாபுரத்தில் இன்றும் நாளை பாலமேட்டிலும் வருகின்ற 17ந்தேதி உலகபிரசித்தி பெற்ற அலங்காநல்லூரிலும் களைக்கட்டுகிறது.இந்நிலையில் இன்று அவனியாபுரத்தில் சரியாக காலை 8 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டியானது தொடங்கியது.

இதற்காக அவனியாபுரம் -திருமங்கலம் சாலையில் வாடிவாசல் ஆனது அமைக்கப்பட்டுள்ளது. மேலும் போட்டியினை கண்டுகளிக்கும் விதமாகவும் பார்வையாளர்கள் உள்ளே வராமலிருக்க பேரிகார்டுகள் அமைக்கப்பட்டு பலத்த பாதுகாப்போடு நடைபெற்று வருகிறது.வாடிவாசலில்  சீறிப்பாய  700 காளைகள் திமிளை காட்டிவாறு நிற்கின்றன இந்த காளைகள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டு அவற்றிற்கு டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளன. ஜல்லிக்கட்டில் பங்கேற்க திண்டுக்கல், தேனி, கம்பம் மற்றும் திருச்சி, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டப் பகுதிகளில் இருந்து வருகின்ற  காளைகள் அனைத்தும் மருத்துவ பரிசோதனைக்கு உட்பட்ட பிறகே வாடிவாசல் வழியாக அனுமதிக்கப்பட வேண்டும் என்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுப்படி அமைக்கப்பட்டிருக்கும் ஓய்வு பெற்ற நீதிபதி மாணிக்கம் அவர்களின் தலைமையிலான குழுவானது இன்று காலை 8 மணிக்கு போட்டியை தொடங்கி வைத்தனர். சீறிப்பாய்ந்த காளைகளை அடக்க மாடுபிடி வீரர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில் தான் மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டை ஓய்வுபெற்ற நீதிபதி கண்காணிப்பில் நடத்துவதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது இதனை விசாரித்த உச்சநீதிமன்றம்  ஜல்லிக்கட்டு சரியாக நடந்து கொண்டிருப்பதால் அதில் நாங்கள் தலையிட விரும்பவில்லை  என்று கூறி மனுக்களை தள்ளுபடி செய்து  உத்தரவிட்டுள்ளது.

Published by
kavitha

Recent Posts

MI vs GT: மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற குஜராத் பவுலிங் தேர்வு.!

MI vs GT: மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற குஜராத் பவுலிங் தேர்வு.!

மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே…

6 minutes ago

சூடு பிடிக்க தொடங்கிய ‘கூலி’ பட ப்ரோமோஷன்.., கவனத்தை ஈர்க்கும் கிளிம்ப்ஸ் வீடியோ.!

சென்னை : இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'கூலி' என்கிற அதிரடி திரில்லர் திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில்…

38 minutes ago

சுரங்க முறைகேடு வழக்கு: கர்நாடகா பாஜக எம்.எல்.ஏவுக்கு 7 ஆண்டுகள் சிறை.!

கர்நாடகா : நீண்டகாலமாக நிலுவையில் உள்ள ஒபுலாபுரம் சட்டவிரோத சுரங்க வழக்கில் கர்நாடக முன்னாள் அமைச்சர் மற்றும் 3 பேரை குற்றவாளிகள்…

1 hour ago

அரசு ஊழியர்களுக்கான பண்டிகைக்கால முன்பணம் ரூ.20,000 ஆக உயர்த்தி அரசாணை வெளியீடு.!

சென்னை : தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான பண்டிகை கால முன்பணம் ரூ.10,000-லிருந்து ரூ.20,000-ஆக உயர்த்தி சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தநிலையில்,…

1 hour ago

30 முறை மட்டுமே குடிநீர் கேன்களை பயன்படுத்த வேண்டும் – உணவு பாதுகாப்பு துறை.!

சென்னை : நகர்புறங்களில் பெரும்பாலும் கேன் குடிநீர் பயன்பாட்டில் உள்ளது. தமிழகத்தில் குடிநீர் கேன் உற்பத்தி மற்றும் விற்பனை செய்யும்…

2 hours ago

“ஆர்யா என் வீட்டையே இடிச்சிட்டான்..” – இசை வெளியீட்டு விழாவில் உண்மையை உடைத்த சந்தானம்.!

சென்னை : நடிகர் சந்தானம் நடித்து முடித்திருக்கும் 'டிடி நெக்ஸ்ட் லெவல' என்கிற நகைச்சுவைப் படம் வெளியீட்டிற்கு தயாராக உள்ளது.…

3 hours ago