ஆழ்துளை கிணற்றில் விழும் குழந்தைகளை மீட்க உதவும், கருவியை உருவாக்கினால் பரிசு வழங்கப்படும் என்று தகவல் தொழில்நுட்ப துறை செயலாளர் சந்தோஷ் பாபு தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை அருகே நடுகாட்டுப்பட்டியில் கடந்த 25-ஆம் தேதி மாலை வீட்டின் தோட்டத்தில் விளையாடி கொண்டிருந்த 2 வயது சிறுவன் சுஜித் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான். தவறி விழுந்த சுஜித்தை காப்பாற்ற மீட்புக்குழுவினர் 80 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்றது .ஆனால் நேற்று இரவு 10 மணிக்கு மேலாகவே சிறுவனின் உடல் சிதைந்து துர்நாற்றம் வீசியதாக தெரிவிக்கப்பட்டது.இதனையயடுத்து குழந்தை சுஜித் உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது .இறுதியாக சுஜித் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
ஆனால் சிறுவனை உயிருடன் மீட்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.ஆனால் அவைகள் தோல்வியில் தான் முடிந்தது.இந்த நிலையில் தகவல் தொழில்நுட்ப துறை முதன்மை செயலாளர் சந்தோஷ் பாபு தனது முகநூல் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.அவரது பதிவில், ஆழ்துளை கிணற்றில் விழும் குழந்தைகளை மீட்க உதவும், கருவியை கண்டுபிடிக்கும் தனி நபர் / நிறுவனத்திற்கு ரூ.5 லட்சம் பரிசு வழங்கப்படும்.ரூ.5 லட்சம் பரிசு கொடுக்கலாம் என்ற பரிந்துரையை முதல்-அமைச்சரின் அலுவலகத்திற்கு அனுப்பி உள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : இந்தியாவின் எல்லையோர குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்துள்ளது. இதனை இந்திய ராணுவம் பெரும்பாலும் முறியடித்தாலும்,…
டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…
டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் டெல்யில் இன்று…
சண்டிகர் : காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல், அதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர்…