144Section: ராமநாதபுரத்தில் அக்டோபர் 31 வரையில் 144 தடை.! மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.!

Published by
பாலா கலியமூர்த்தி

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் வரும் 11-ம் தேதி இமானுவேல் சேகரன் 66-வது நினைவு தினம் அனுசரிக்கப்பட உள்ளது. இமானுவேல் சேகரின் நினைவு தினத்தையொட்டி தமிழக அரசு மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் கலந்து கொண்டு மரியாதை செலுத்த உள்ளனர். இமானு வேல் சேகரன் நினைவிடத்தில் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன், காவல்துறை உயரதிகாரிகள் உள்ளிட்டோர் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சுதந்திரப் போராட்டத் தியாகி இமானுவேல் சேகரன் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் தென் மாவட்டங்களில் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமையை நிலைநாட்டவும் போராடினார். இந்த சமயத்தில் இவரது நினைவு தினத்தையொட்டி,  சிவகங்கையில் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கும் 11-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டது.

இதற்கு பதிலாக வரும் 23 ஆம் தேதி பள்ளிகள், கல்லூரிகள் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்,  ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் செப்டம்பர் 9-ஆம்  தேதி முதல் அக்டோபர் 31ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இமானுவேல் சேகரின் நினைவு தினம் மற்றும் முத்துராமலிங்க குரு பூஜையை ஒட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

அதன்படி, சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும், அமைதியான சூழலை உருவாக்கவும், ராமநாதபுரம் மாவட்டத்தில் வரும் 9ம் தேதி நள்ளிரவு முதல் அக்டோபர் 31ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பித்தார் மாவட்ட ஆட்சியர் விஷ்ணுசந்திரன். மேலும், 144 தடை உத்தரவு நாளில் வெளி மாவட்டங்களை சேர்ந்த வாகனங்கள் அனுமதியின்றி வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

மருத்துவமனையில் இருந்தவாறே மீண்டும் அலுவல் பணியை தொடங்கிய முதல்வர் ஸ்டாலின்.!

சென்னை : சென்னை அப்போலோ மருத்துவமனையில் லேசான தலைச்சுற்றல் காரணமாக அனுமதிக்கப்பட்டு, முதல்வர் ஸ்டாலின் 6-வது நாளாக சிகிச்சை பெற்று வருகிறார்.…

4 minutes ago

பாலஸ்தீனத்துக்கு தனி நாடு அங்கீகாரம் – பிரான்ஸ் அறிவிப்பு.!

பாரிஸ் : பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன், பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க உள்ளதாக அறிவித்துள்ளார். இந்த முடிவு 2025…

23 minutes ago

மக்களே கவனம்!! சென்னையில் 3 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் ரத்து.!

சென்னை : சென்னை மாநகராட்சியின் கீழ் உள்ள 7 மண்டலங்களில் ஜூலை 30ம் தேதி முதல் ஆகஸ்ட் 1ம் தேதி…

38 minutes ago

”வைகோவால் மனஉளைச்சல்.., ஆக.2ம் தேதி உண்ணாவிரதம்” – மல்லை சத்யா.!

சென்னை : மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக (மதிமுக) துணைப் பொதுச் செயலாளரான மல்லை சத்யா, கட்சித் தலைவர் வைகோவுக்கு…

50 minutes ago

தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத்தின் திருவிழா.., கொடியேற்றத்துடன் விமரிசையாக துவங்கியது.!

தூத்துக்குடி : பனிமய மாதா பேராலயத்தின் 443-வது ஆண்டு திருவிழா நேற்று கொடி பவனியுடன் தொடங்கி, இன்று (ஜூலை 26)…

3 hours ago

தூத்துக்குடி விமான நிலையம் இன்று திறப்பு.., சிறப்பம்சங்கள் என்னென்ன.?

தூத்துக்குடி : தூத்துக்குடி விமான நிலையத்தின் புதிய முனையம் இன்று (ஜூலை 26, 2025) இரவு 8 மணிக்கு பிரதமர்…

3 hours ago