BJP State Leader K Annamalai [File Image]
இன்று சென்னை தி- நகரில் பாஜக கட்சியின் மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வகைகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மூத்த தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் நிர்வாகிகள் மத்தியில், நம்மிடம் இருந்து பிரிந்து செல்பவர்கள் செல்லட்டும், அது அவரவர் தனிப்பட்ட விருப்பம். கூட்டணி முறிவு பற்றி தேசிய தலைமையிடம் விளக்கம் அளித்துள்ளேன். இனி தேசிய தலைமை முடிவு செய்யும் என அண்ணாமலை பேசியதாக தகவல்கள் முன்னதாக வெளியாகி இருந்தன.
இந்த ஆலோசனை கூட்டத்தொடர் முடிந்து பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசினார். அவர் கூறுகையில், 1998ஆம் ஆண்டு முதலே தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) இந்தியாவில் இருக்கிறது. 25 ஆண்டுகளாக NDA கூட்டணி இருக்கிறது. அதில் நிறைய கட்சிகள் வரும், போகும்.
வரும் 2024ஆம் ஆண்டு தேர்தலில் NDA கூட்டணி சார்பாக தமிழகத்தில் இருந்து அதிக அளவிலான உறுப்பினர்கள் நாடாளுமன்றம் செல்வார்கள். அதற்கு தற்போது அறிகுறிகள் தெரிகின்றன. ஒவ்வொரு கட்சியிலும் அந்தந்த கட்சி முன்னேற தான் பார்க்கும். பாஜகவும் அப்படி தான். 2024 தேர்தல் மிக முக்கிய தேர்தல். தமிழகத்தில் 39க்கு 39 பாஜக கூட்டணி வெற்றி பெரும்.
என்மீது அதிமுக மட்டுமல்ல பல கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. அதற்கெல்லாம் நான் பதில் கூற முடியாது. நான் எனது பாதையில் தெளிவாக இருக்கிறேன். பாஜக எப்படி செல்ல வேண்டும் என்பதிலும் தெளிவாக இருக்கிறேன். தமிழகத்தில் ஆளும் கட்சியாக திமுக உள்ளது . மத்தியில் நாங்கள் (பாஜக) இருக்கிறோம். 2024 தேர்தல் இதற்கெல்லாம் பதில் சொல்லும் .
3வது முறையாக பிரதமர் மோடி வரவேண்டும். 2024 தேர்தல் திமுக vs பாஜக தான். பாஜக சார்பாக நாங்கள் செய்ததை சொல்கிறோம். திமுக சார்பாக அவர்கள் செய்ததை சொல்லட்டும். மக்கள் முடிவு எடுப்பார்கள். திமுக தான் ஆட்சியில் இருக்கிறது. அவர்கள் தான் Powerஇல் இருக்கிறது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார்.
சென்னை : மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடத்தில் பரப்புரை மேற்கொண்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு…
சென்னை : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்திய குரூப்-4 தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும் என்று…
பீகார் : இந்த ஆண்டு பீகாரில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், தேர்தலுக்கு முன்னதாக நிதிஷ் அரசு…
டெல்லி : கடந்த மாதம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. அது போயிங் 787 ட்ரீம்லைனர் விமானம். அதில்…
நெல்லை : 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்பு தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில்,…
லண்டன் : 'ஹாரி பாட்டர்' படத் தொடரில் ஹெர்மியோன் கிரேன்ஜர் வேடத்தில் நடித்து பிரபலமான ஹாலிவுட் நடிகை எம்மா வாட்சன்…