மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.3,000 கோடி கடனுதவி வழங்கும் திட்டம் – தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின்!

Published by
Edison

திருத்தணி:மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.3,000 கோடி கடன் உதவி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் திட்டத்தை,திருத்தணியில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தற்போது தொடங்கி வைத்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு கடன் உதவி வழங்கும் திட்டத்தை தொடங்கி வைப்பதற்காக திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ச்ன்றுள்ள முதல்வர் ஸ்டாலின் அவர்கள்,மகளிர் சுய உதவிக்குழுவினரின் உற்பத்தி மற்றும் தயாரிப்பு பொருட்களின் கண்காட்சியை பார்வையிட்டார்.

இந்நிலையில்,மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.3,000 கோடி கடன் உதவி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் திட்டத்தை,திருத்தணியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தற்போது தொடங்கி வைத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து,பேசிய முதல்வர் அவர்கள்:”யாரையும் நம்பியிருக்காமல் தன்னம்பிக்கையுடன் செயல்படுவதே மகளிர் சுயஉதவி குழுக்களின் நோக்கமாக உள்ளது.இத்தகைய மகளிர் சுயஉதவி குழுக்கள் மூலம் இந்தியாவிலேயே முதல் முறையாக பெண்களின் முன்னேற்றத்திற்கு அடித்தளம் அமைக்கும் விதமாக மகளிர் சுயஉதவி குழுக்கள் அமைக்கப்பட்டது கலைஞர் அவர்கள் ஆட்சியில்தான்.மகளிர் சுய உதவி குழுக்களுக்காக திமுக அரசு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது.

அந்த வகையில்,ஆட்சிக்கு வந்ததும் மகளிர் சுய உதவிக் குழுவுக்கு மகிழ்ச்சி தரும் வகையில்,அத்துறைக்கு அமுதா அவர்களை செயலாளராக நியமித்தேன்.தருமபுரி ஆட்சியராக சிறப்பாக பணியாற்றிய அவர், மகளிர் பயன்பெறும் வகையில் பொறுப்பை சிறப்பாக எடுத்துச் செல்வார்.அதனால்,இனி மகளிர் சுயஉதவி குழுக்களின் நிலை பற்றி கவலைப்பட தேவையில்லை.

மேலும்,மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு கடனுதவி வழங்கும் இந்த விழா திருத்தணியில் மட்டும் அல்லது தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.அதன்படி,இன்று 58,453 மகளிர் சுய உதவி குழுக்களைச் சேர்ந்த 7,56,142 பேருக்கு மொத்தம் ரூ.2,749.85 கோடி கடனுதவி வழங்கப்படுகிறது.

இந்த ஆண்டுக்குள் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.20,000 கோடி கடனுதவி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.அந்த வகையில்,இந்த மாத இறுதிக்குள் ரூ.1000 கோடி கடனுதவி வழங்கப்படும்.இது எனது ஆட்சியல்ல,நமது ஆட்சி.அதன்படி,நமது ஆட்சியில் நலத்திட்ட பணிகள் தொடரும்”,என்று தெரிவித்துள்ளார்.

Recent Posts

”ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை, மீண்டும் தொடரும்” – அமைச்சர் ராஜ்நாத் சிங்.!

”ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை, மீண்டும் தொடரும்” – அமைச்சர் ராஜ்நாத் சிங்.!

டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…

3 minutes ago

பரபரக்கும் போர் சூழல்: லாகூரில் இருந்து அமெரிக்கர்கள் வெளியேற உத்தரவு.!

லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…

59 minutes ago

பாகிஸ்தானின் வான் தடுப்பு அமைப்பை சில்லி சில்லியாக்கிய இந்தியா.!

புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…

2 hours ago

பதிலுக்கு பதில் தாக்குதல் தான்! பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…

3 hours ago

ஆபரேஷன் சிந்தூரில் 100 பயங்கரவாதிகள் பலி! பாதுகாப்புத் துறை அமைச்சர் தகவல்!

டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…

4 hours ago

தமிழக அமைச்சரவையில் திடீர் இலாகா மாற்றம்! ரகுபதி to துரைமுருகன் to ரகுபதி!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…

4 hours ago