தமிழகத்திற்கு இன்று மாலை 5 மணிக்கு 4.2 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் வரவுள்ளதாக சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசு தளர்வுகளற்ற ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. மேலும், மாநிலம் முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. முதலில் தடுப்பூசி போடுவது குறித்து பொதுமக்களிடம் தயக்கம் இருந்த நிலையில் பின்னர் ஏற்படுத்திய விழிப்புணர்வு காரணமாக தற்போது பலர் தடுப்பூசி செலுத்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.
நேற்று சுகாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ஜூன் மாதத்துக்கான முதல் தவணை தடுப்பூசி எப்போது அனுப்பப்படும் என்பது ஜூன் 6-ஆம் தேதிக்கு பிறகே தெரியும். தற்போது, 4.93 லட்சம் தடுப்பூசிகள் கையில் உள்ள நிலையில் அவை நாளையுடன் தீர்ந்து விடும் இதன்காரணமாக ஜூன் 3-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தப்படாது என தெரிவித்தார்.
இந்நிலையில், தமிழகத்திற்கு 4,20,570 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் இன்று மாலை 5 மணிக்கு சென்னை வருகிறது என சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் இன்று மாலை 6.20 லட்சம் தடுப்பூசிகள் தமிழகத்தில் வருகிறது. மாலை சென்னைக்கு வர உள்ள கொரோனா தடுப்பூசிகளை உடனடியாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதனால், தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தும் பணி நிறுத்தப்படாது என எதிர்பாக்கப்படுகிறது.
டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம்…
சென்னை : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பஹல்காம் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25 இந்தியர்கள் மாறும்…
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…