திருப்பூரில் கோர்ட் ரோடு முதல் வீதியில் காவல்துறை குடியிருப்பு உள்ளது.அதில் காவலர்கள் குடும்பத்துடன் வசித்துவருகின்றன.அங்கு ஜெ பிளாக்கில் மாநகர ஆயுத படை பிரிவில் பணியாற்றும் சேதுபதி தனது குடும்பத்துடன் வசித்துவருகிறார்.
இந்நிலையில் ஜூலை 11-ம் தேதி மதியம் சேதுபதியின் மனைவி கனகா வீட்டின் கதவை திறந்து வைத்துவிட்டு சமையல் அறையில் சமையல் செய்து கொண்டு இருந்துள்ளார்.அப்போது அவரின் படுக்கை அறையில் இருந்து ஏதோ சத்தம் கேட்டுள்ளது.
என்ன சத்தம் இது என்று பார்க்க கனகா படுக்கை அறைக்கு வந்துள்ளார்.அப்போது அங்கு 4 பெண்கள் பீரோவை தொறந்து அதில் இருந்த துணியை ஒரு பையில் துணிகளை எடுத்து வைத்துக்கொண்டிருந்துள்ளனர்.
அப்போது அதை பார்த்த கனகா அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டுள்ளார்.பின்னர் அந்த பெண்கள் அவரை தள்ளி விட்டுவிட்டு வெளியே ஓடிச்சென்றுள்ளனர்.இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனே அந்த பெண்கள் மடக்கி பிடித்துள்ளனர்.
பின்னர் அவர்களை காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.பின்னர் அவர்களை விசாரித்த காவல்துறையினர் அவர்கள் திருப்பூரில் உள்ள வீரபாண்டிபுரம் அருகே உள்ள பறந்து பாளையத்தைச் சேர்ந்த ராணி,செல்வி,சந்தியா மற்றும் பவானி என தெரியவந்துள்ளது.
பின்னர் திருட முயன்றதால் அந்த பெண்களின் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
சென்னை : நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) காலமானார். காதல் திருமணம் செய்து கொண்ட கவுண்டமணி…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025 இன் 55 வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான…
சென்னை : குரூப் 2, 2ஏ பிரதான தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அறிவிப்பு ஒன்றையும் டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் சட்டத்துக்குப் புறம்பாக தங்கியுள்ள பாகிஸ்தான் பங்களாதேஷை சேர்ந்தவர்களை வெளியேற்ற தமிழக அரசை வலியுறுத்தியும் பயங்கரவாத தாக்குதலை…
மதுரை : வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பு ஐந்து நாட்களாக கொடைக்கானலில் நடைபெற்று வந்தது.…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 24 அன்று பிரதமர் நரேந்திர மோடி, பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னணியில் உள்ளவர்களும், அவர்களை…