தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 52 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைய தொடங்கிய நிலையில், இன்று ஒரே நாளில் 4,462 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 6,70,392 ஆக அதிகரித்துள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் ஒரே நாளில் 1,130 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,85,573 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் குறையும் நிலையில், குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. அந்தவகையில் 5,083 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், குணமடைந்தோர் எண்ணிக்கை 6,17,403 ஆக அதிகரித்துள்ளது. மேலும், கொரோனா தொற்றால் இன்று 52 பேர் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 10,423 ஆக அதிகரித்துள்ளது. இதில் தனியார் மருத்துவமனையில் 21 பேரும், அரசு மருத்துவமனையில் 31 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் இன்று கொரோனா மட்டுமின்றி, மற்ற நோயால் பாதிக்கப்பட்ட 50 பேர் உயிரிழந்துள்ளதாகவும், கொரோனவால் மட்டும் பாதிக்கப்பட்ட 2 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் இன்று 11 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,452 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 50 முதல் 65 பேர் வரை கொரோனா தொற்றால் உயிரிழக்கும் நிலையில், 5000 பேர் வரை குணமடைந்து வருவது, சற்று ஆறுதல் அளித்து வருகிறது.
மாலத்தீவு : உலக பத்திரிகை சுதந்திர தினத்தில் மாலத்தீவு அதிபர் முகம்மது முய்ஸு 14 மணி நேரம் 54 நிமிடங்கள்…
மாஸ்கோ : ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இன்று (திங்கள்கிழமை) பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, கடந்த மாதம்…
சென்னை : நேற்று இந்தியா முழுக்க இளங்கலை மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் இருந்து ஒன்றரை…
சென்னை : நேற்று பல்வேறு மருத்துவத்துறை இளங்கலை படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் நடைபெற்றது. இதில் தமிழகத்தில்…
சென்னை : தமிழ் சினிமாவில் 80,90களில் கொடிகட்டி பறந்த காமெடியன்களில் மிக முக்கியமானவர் கவுண்டமணி. சினிமாவில் நடிப்பதை தாண்டி வேறு…
மதுரை : சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் சைவ சித்தாந்த மாநாடு நடைபெற்றது. அதில் கலந்து கொள்ள…