முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணியின் வீட்டில், 551 யூனிட் மணல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதிமுகவின் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணியின் வீடு உள்ளிட்ட அவருக்கு சொந்தமான 35 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். இதில், கே.சி.வீரமணி வருமானத்துக்கு அதிமாக சொத்து சேர்த்ததாக வேலூரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
மேலும், சென்னை, வேலூர், திருவண்ணாமலை, ஓசூர் உள்ளிட்ட 35 இடங்களில் சோதனை நடைபெற்றது. இந்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வீடுகளில் நடந்த சோதனையில் பணம், நகை, சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணியின் வீட்டில் வேலூர் மாவட்ட கனிமவள உதவி இயக்குநர் பெர்னார்டு கடந்த 16-ம் தேதி இரவு 11 மணியளவில் ஆய்வு செய்தார். அங்கு 551 யூனிட் மணல் இருப்பதும், அதன் மதிப்பு ரூ.33 லட்சம் இருக்கும் என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், அங்குள்ள மணல் இருப்பு குறித்த அறிக்கையை திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹாவிடம் அவர் அறிக்கையாக அளித்துள்ளார்.
மேலும், இவ்வளவு மணல் எங்கிருந்து வாங்கப்பட்டது? அதற்கான ரசீது இருக்கிறதா என்றும் அப்படி ரசீதுகள் இருந்தால் அதை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் வீரமணியிடம் விளக்கம் கோர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அப்படி ஆவணங்களை அவர் சமர்ப்பிக்காவிட்டால் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…
டெல்லி : ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22, 2025 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக தகவல்…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா பழிவாங்கியுள்ளது. மே 7 ஆம் தேதி நள்ளிரவு சுமார் 1.30 மணியளவில்,…