அதிகரிக்கும் கொரோனா.. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மேலும் 66 பேர் உயிரிழப்பு!

Published by
Surya

தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த மேலும் 66 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில், இன்று ஒரே நாளில் 5,688 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 6,03,290 ஆக அதிகரித்துள்ளது.

இதில் அதிகபட்சமாக சென்னையில் இன்று ஒரே நாளில் 1,289 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,68,689 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று 66 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 9,586 ஆக அதிகரித்துள்ளது. இன்று உயிரிழந்த 66 பேரில், தனியார் மருத்துவமனையில் 27 பேரும், அரசு மருத்துவமனையில் 39 பேர் உயிரிழந்துள்ளனர்.

இன்று உயிரிழந்தோரில் கொரோனா மட்டுமின்றி, மற்ற நோயால் பாதிக்கப்பட்ட 57 பேர் உயிரிழந்துள்ளதாகவும், கொரோனவால் மட்டும் பாதிக்கப்பட்ட 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னையில் இன்று 18 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,228 ஆக அதிகரித்துள்ளது. இதில், சென்னைக்கு அடுத்தபடியாக, செங்கல்பட்டில் 560 பேரும், திருவள்ளூரில் 550 பேரும், மதுரையில் 389 பேரும், கோவையில் 444 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

Published by
Surya

Recent Posts

பெரியார் – அண்ணா குறித்து விமர்சனம் – இந்து முன்னணிக்கு ஓ.பி.எஸ். கண்டனம்.!

பெரியார் – அண்ணா குறித்து விமர்சனம் – இந்து முன்னணிக்கு ஓ.பி.எஸ். கண்டனம்.!

சென்னை : மதுரையில் கடந்த ஜூன் 22ம் தேதி பாஜக மற்றும் இந்து முன்னணி அமைப்பால் நடத்தப்பட்ட முருகன் பக்தர்கள்…

39 minutes ago

திருப்பூரில் பரபரப்பு: இந்து முன்னணி பிரமுகர் நடுரோட்டில் வெட்டிக்கொலை.!

திருப்பூர் : இந்து முன்னணி அமைப்பின் திருப்பூர் வடக்கு ஒன்றியத் தலைவராக இருந்த பாலமுருகன் என்பவர் பைனான்ஸ் நிறுவனம் நடத்திவந்த…

53 minutes ago

“சினிமாவில் பல நாட்களாக போதைப்பொருள் உள்ளது” – நடிகர் விஜய் ஆண்டனி பளிச்.!

சென்னை : இயக்குநர் லியோ ஜான் பால் இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி நடிக்கும் ''மார்கன்'' திரைபடம் ஜூன் 27…

1 hour ago

ரிஷப் பண்ட்-க்கு போட்டி கட்டணத்தில் 50% அபராதம் – ஐசிசி அதிரடி.!

லீட்ஸ் : முதல் டெஸ்டின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் சதம் அடித்தார். அற்புதமான…

1 hour ago

“இந்தியரின் விண்வெளி பயணம் திட்டமிட்டபடி நடைபெறும்” – ஸ்பேஸ் எக்ஸ்.!

அமெரிக்கா : இன்று (ஜூன் 25, 2025) இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர் ஆக்சியம்-4…

2 hours ago

Ostrava Golden Spike : ஈட்டி எறிதல் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற நீரஜ் சோப்ரா.!

மொராவியன்-சிலேசியன் : செக் குடியரசின் ஆஸ்ட்ராவா நகரத்தில் நடைபெற்ற 'ஆஸ்ட்ராவா கோல்டன் ஸ்பைக்' தடகளப் போட்டியில் இந்தியாவின் 'தங்க மகன்'…

3 hours ago