தமிழகத்தில் ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 74 பேர் உயிரிழப்பு!

Published by
Surya

தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த மேலும் 74 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில், இன்று ஒரே நாளில் 5,693 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 5,02,759 ஆக அதிகரித்துள்ளது.

இதில் அதிகபட்சமாக சென்னையில் இன்று ஒரே நாளில் 994 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,48,584 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று 74 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 8,381 ஆக அதிகரித்துள்ளது. இன்று உயிரிழந்த 74 பேரில், தனியார் மருத்துவமனையில் 35 பேரும், அரசு மருத்துவமனையில் 39 பேர் உயிரிழந்துள்ளனர்.

இன்று உயிரிழந்தோரில் கொரோனா மட்டுமின்றி, மற்ற நோயால் பாதிக்கப்பட்ட 66 பேர் உயிரிழந்துள்ளதாகவும், கொரோனவால் மட்டும் பாதிக்கப்பட்ட 8 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் இன்று 17 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அங்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,976 ஆக அதிகரித்துள்ளது. இதில், சென்னைக்கு அடுத்தபடியாக, செங்கல்பட்டில் 481 பேரும், திருவள்ளூரில் 476 பேரும், மதுரையில் 375 பேரும், கோவையில் 353 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

Published by
Surya

Recent Posts

நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! அலர்ட் கொடுத்த வானிலை மையம்!

நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! அலர்ட் கொடுத்த வானிலை மையம்!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,03-07-2025 முதல் 05-07-2025 வரை தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…

5 minutes ago

7 நாட்கள் ஓய்வு கிடைத்த பிறகும் பும்ராவுக்கு அணியில் இடம் கொடுக்கவில்லை? ரவி சாஸ்திரி ஆதங்கம்!

எட்ஜ்பாஸ்டன் : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளரும், முன்னாள் வீரரும், தற்போதைய வர்ணனையாளருமான ரவி சாஸ்திரி, இந்திய அணியின்…

26 minutes ago

வேறு மாதிரி என்றால், எந்த மாதிரி? டென்ஷனா எடப்பாடி பழனிசாமி!

சென்னை : விருதுநகர் மாவட்டத்தின் சாத்தூர் வட்டம், சின்னக்காமன்பட்டி கிராமத்தில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் நேற்று காலை 8:30 மணியளவில்…

1 hour ago

போதைப்பொருள் வழக்கு : ஜாமின் கேட்ட கிருஷ்ணா, ஸ்ரீகாந்த்! தீர்ப்பை தள்ளி வைத்த நீதிமன்றம்!

சென்னை : போதைப் பொருள் (கொக்கைன்) பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்ட நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா, ஜாமீன் கோரி சென்னை…

1 hour ago

அஜித்தை காப்பாற்ற முடியலன்னு வருத்தமா இருக்கு…வீடியோ எடுத்தவர் கொடுத்த பேட்டி!

சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித் குமார், நகை திருட்டு வழக்கில்…

2 hours ago

அருளை கட்சியில் இருந்து நீக்க அன்புமணிக்கு அதிகாரம் இல்லை – ராமதாஸ்!

சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. அருளை கட்சியில் இருந்து நீக்குவதற்கு தலைவர்…

3 hours ago