தேசிய அளவிலான களரிப் போட்டிகளில் 8 பதக்கங்கள் – தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்த மாணவர்கள்!

Published by
Edison

தேசிய அளவிலான களரிப் போட்டிகளில் 8 பதக்கங்கள் பெற்று,ஈஷா சம்ஸ்க்ரிதி மாணவர்கள் தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளனர்.

இந்திய பாரம்பரிய கலைகளில் களரிப் பயட்டு ஒரு முக்கிய கலையாகும். சாகசம் நிறைந்த இக்கலையை ஊக்குவிப்பதற்காக இந்திய களரிப் பயட்டு கூட்டமைப்பு ஆண்டுதோறும் தேசிய அளவிலான போட்டிகளை நடத்தி வருகிறது.

அதன்படி, 2020-21-ஆம் ஆண்டிற்கான களரிப் பயட்டு போட்டிகள் ஆகஸ்ட் 1-ம் தேதி தொடங்கி 14-ம் தேதி வரை ஆன்லைன் வாயிலாக நடைபெற்றது. இதில் 20-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் இருந்து 600 க்கும் அதிகமானோர் பங்கேற்றனர். தமிழகத்தில் இருந்து ஈஷா சம்ஸ்க்ரிதி மாணவர்களும் பங்கேற்றனர்.

இந்நிலையில், ஈஷா சம்ஸ்க்ரிதி மாணவர்கள் ஒரு தங்கம், 2 வெள்ளி, 5 வெண்கலம் என மொத்தம் 8 பதக்கங்களை வென்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளனர்.அதன்படி,

மெய்பயட்டு பிரிவு:

  • ஈஷா சம்ஸ்க்ரிதி மாணவர் சீனிவாசன் – தங்கப் பதக்கம்.
  • பத்மேஷ் ராஜ் -வெள்ளிப் பதக்கமும்,
  • அரவமுதன் மற்றும் அக்ஷயா, வினோதினி – வெண்கல பதக்கங்களும் வென்றனர்.

உரிமி பிரிவு:

  • மாணவர் பிரசன்னா – வெள்ளி பதக்கமும்,

கெட்டுகரி பிரிவு:

  • சீனிவாசன் மற்றும் லோகேஷ் – வெண்கல பதக்கங்களும் வென்றனர்.

சுவாடு பிரிவு:

  • இன்ப தமிழன் – வெண்கலம் பதக்கமும் வென்றார்.

இவ்வாறு,ஈஷா சம்ஸ்க்ரிதி மாணவர்கள் மொத்தம் 8 பதக்கங்களை வென்று சாதனை படைத்து தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.

Recent Posts

உயர்நீதிமன்ற வழக்கு விசாரணை…கழிவறையில் இருந்து பங்கேற்ற நபர்!

குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…

36 minutes ago

ராமதாஸ் வைத்த குற்றச்சாட்டுகள்..”மாமனாரை மதிக்கணும்”..சௌமியா கொடுத்த பதில்!

சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தனது மருமகள் சௌமியா அன்புமணி 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தர்மபுரி தொகுதியில் போட்டியிட்டு…

1 hour ago

ஆஹா! கோவிலுக்கு இயந்திர யானை வழங்கிய த்ரிஷா…குவியும் வாழ்த்துக்கள்!

விருதுநகர் : மாவட்டம், அருப்புக்கோட்டை வீரலட்சுமி நகரில் அமைந்துள்ள ஸ்ரீ அஷ்ட லிங்க ஆதிசேஷ செல்வ விநாயகர் திருக்கோயில் மற்றும்…

2 hours ago

சிறுவன் கடத்தல் வழக்கு : பூவை ஜெகன்மூர்த்தி தலைமறைவு!

திருவள்ளூர் :மாவட்டம் களம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில், புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், கே.வி.குப்பம்…

3 hours ago

இந்த மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு! டெல்டா வெதர்மேன் கொடுத்த அலர்ட்!

சென்னை : டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் இன்றயை வானிலை தொடர்பான தகவலை தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்த தகவலின் படி, தென்மேற்கு…

3 hours ago

ஈரான் தலைவர் உயிரை காப்பாற்றியதே நான் தான்! – ட்ரம்ப் போட்ட பதிவு!

வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான 12 நாள் மோதலின்போது, இஸ்ரேலின் மொசாட் உளவு அமைப்பு காமெனியை குறிவைத்து தாக்குதல் திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால்…

3 hours ago