கச்சதீவில் உள்ள புனித அந்தோணியார் ஆலய திருவிழாவில் பங்கேற்க ராமேஸ்வரத்தில் இருந்து 80 பக்தர்கள் இன்று கச்சத்தீவு செல்கின்றனர்.3 விசைப்படகுகள்,ஒரு நாட்டுப் படகில் இன்று காலை 9 மணிக்கு 80 பேரும் உரிய பாதுகாப்புடன் கச்சத்தீவு பயணம் மேற்கொள்கின்றனர்.
கச்சதீவில் உள்ள புனித அந்தோணியார் திருவிழா இன்று மாலை 5 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.அதன்படி, அந்தோணியார் உருவம் பொறித்த கொடியேற்றப்படவுள்ளது.
அதன் பின்னர்,சிலுவைப்பாதை திருப்பலை மற்றும் அந்தோணியார் தேர்பவனி நடைபெறுகிறது.இதனைத் தொடர்ந்து,நாளை காலை 7 மணிக்கு திருப்பலி நடைபெற்ற பின்னர் 9 மணியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.இதனை முன்னிட்டு,திருவிழாவில் பங்கேற்க ராமேஸ்வரத்தில் இருந்து 80 பக்தர்கள் இன்று கச்சத்தீவு செல்கின்றனர்.
இந்த திருவிழாவுக்கு இடையே கச்சத்தீவில் இன்று இரவு தமிழக -இலங்கை மீனவர்கள் இடையே பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.அதன்படி,பாக் நீரிணை பகுதியில் ராமேஸ்வரம் மீனவர்கள் பிரச்சனையின்றி மீன்பிடிப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…
டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…
பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…