இனி ஆதார் எண் இருந்தால் மட்டுமே ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்ய முடியும் என்று தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
2021-ம் ஆண்டிற்கான தேர்வு அட்டவணையை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது. அதன்படி, துணை ஆட்சியர், காவல்துறை துணை கண்காணிப்பாளர, உதவி ஆணையாளர், துணை பதிவாளர், உதவி இயக்குநர், மாவட்ட அலுவலர் போன்ற பணியிடங்களுக்கான குரூப் I தேர்வு வரும் ஜனவரி 3ம் தேதி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டது. குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுக்கான அறிவிப்பு மே மாதம் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இனி ஆதார் எண் இருந்தால் மட்டுமே TNPSC ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்ய முடியும் என்று தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. ஜனவரி 3-ஆம் தேதி நடைபெறவுள்ள குரூப் 1 முதல்நிலை தேர்வு மற்றும் அன்று நடைபெறவுள்ள உதவி இயக்குனர் தேர்வுகளுக்கு ஹால் டிக்கெட் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் ஆதார் எண்ணை இணைத்த பிறகே ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்ய முடியும் என தெரிவித்துள்ளது.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…