ஆவின் பன்னீர் மற்றும் பாதாம் பவுடர் விலை உயர்வு!

ஆவின் நிறுவனம் சார்பில் விற்கப்படும் பன்னீர், பாதாம் பவுடர் ஆகியவற்றின் விலை உயர்வு.
ஆவின் நிறுவனம் சார்பில் விற்கப்படும் பன்னீர் மற்றும் பாதாம் பவுடர் விலை 20 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை உயர்த்தி ஆவின் நிர்வாகம் உத்தரவிட்டது. அதாவது, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள ஆவின் விற்பனையகங்களில், பன்னீர் மற்றும் பாதாம் மிக்ஸ் பொருட்களின் விலை உயர்வு, இன்று முதல் அமலுக்கு வந்தது.
அதன்படி, ஆவின் நிறுவனம் சார்பில் விற்கப்படும் ஒரு கிலோ ஆவின் பன்னீரின் விலை ரூ.450ல் இருந்து ரூ.550-ஆக உயர்ந்துள்ளது. அரை கிலோ பன்னீர் ரூ.250 லிருந்து ரூ.300 ஆக உயர்ந்துள்ளது. ஆவின் நிறுவன 200 கிராம் பாதாம் பவுடர் விலை ரூ.100ல் இருந்து ரூ.120 ஆக உயர்த்தப்பட்டு, தற்போது அமலுக்கு வந்தது. இதனிடையே, உயர்த்தப்பட்ட ஆவின் பொருட்களின் விலையை திரும்பப்பெற வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
