AavinPrice: ஆவின் நெய் மற்றும் வெண்ணெய் விலை உயர்வு – இன்று முதல் அமல்!

Published by
பாலா கலியமூர்த்தி

ஆவின் நெய் மற்றும் வெண்ணை விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதாக ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசின் பால்வளத்துறையின் கீழ் ஆவின் பால் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த ஆவின் நிறுவனத்தின் மூலம் தரமான பொருட்களை குறைந்த விலையில் மக்களுக்கு பயன்தரும் வகையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆவின் நிறுவனத்தினால் பால் மட்டுமின்றி, குலாப்ஜாமுன், பால்கோவா, ஐஸ்கிரீம், நெய், வெண்ணெய், மில்க் கேக், பாயாசம் மிக்ஸ் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலைகள் ஏற்றம் கண்டு வரும் நிலையில், ஆவின் தயாரிப்பு பொருட்களின் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சமீப காலமாக அவினில் பால் விலை மற்றும் மற்ற பொருட்களின் விலை உயர்வால் மக்கள் அதிர்ச்சிக்குள்ளானர்.  ஏற்கனவே காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விலை கடுமையாக அதிகரித்துள்ள நிலையில், ஆவின் விலை உயர்வு பொதுமக்களை அவதியில் ஆழ்த்தியுள்ளது.

ஆவினில் பால் உள்ளிட்ட பொருட்களின் விலை உயர்வுக்கு அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், ஆவின் நெய் மற்றும் வெண்ணை விலையும் உயர்த்தப்படுவதாக ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது. ஆவின் நெய் மற்றும் வெண்ணை விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதாகவும் ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி, அரை கிலோ நெய் ரூ.50 உயர்ந்து ரூ.350க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ ஆவின் நெய் (ரூ.630) ரூ.70 உயர்ந்து ரூ.700க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதுபோன்று அரை கிலோ (500 கிராம்) வெண்ணெய் (ரூ.260) ரூ.15 உயர்ந்து ரூ.275க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும், 15 மில்லி லிட்டர் நெய்யின் விலை 14 ரூபாயிலிருந்து 15 ரூபாயாகவும் , 100 மில்லி லிட்டர் நெய்யின் விலை 70 ரூபாயிலிருந்து 80 ரூபாயாகவும், 100 மில்லி லிட்டர் நெய் பாட்டிலின் விலை 75 ரூபாயிலிருந்து 85 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. 200 மில்லி லிட்டர் நெய் பாட்டில் 145 ரூபாயிலிருந்து 160 ரூபாயாகவும், 500 மில்லி லிட்டர் நெய் பாட்டில் 315 ரூபாயிலிருந்து 365 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல் வெண்ணெய்யின் விலையானது 100 கிராம் 55 ரூபாயிலிருந்து 60 ரூபாயாகவும்உயர்த்தப்பட்டுள்ளது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

கில் மாதிரி விளையாட ஆசைப்படுகிறேன்…சாதனை படைத்த வைபவ் சூர்யவம்சி பேச்சு!

லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…

13 hours ago

மஸ்கின் கட்சியில் இந்த மூன்று அமெரிக்கர்கள் இணைவார்கள்! ட்ரம்ப் ஆதரவாளர் லாரா லூமர் கணிப்பு!

வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய…

13 hours ago

மடப்புரம் அஜித் சகோதரர் நவீன் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதி! என்ன காரணம்?

சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக…

14 hours ago

2 கோடி உறுப்பினர்களை சேர்க்க த.வெ.க மும்முரம்… ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைப்பு!

சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கை அடைய…

15 hours ago

சுப்மன் கில் பேட்டிங் பார்த்து சோர்ந்துட்டோம்! அரண்டு போன இங்கிலாந்து பயிற்சியாளர்!

பர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன்), இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்…

17 hours ago

தூத்துக்குடி விமானத்தில் இயந்திர கோளாறு! அவசரமாக ஓடுபாதையில் நிறுத்தம்!

தூத்துக்குடி : சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஜூலை 6, 2025 காலை 10:10 மணிக்கு புறப்பட இருந்த ஸ்பைஸ்ஜெட்…

18 hours ago