பதிவு துறையில் கடந்த காலங்களில் நடந்த முறைகேடுகள் விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்படும் என்று அமைச்சர் மூர்த்தி அறிவிப்பு.
தமிழக சட்டப்பேரவையில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை மானிய கோரிக்கை விவாதத்தில் பேசிய அமைச்சர் மூர்த்தி, 20 அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், வணிக வரித்துறையின் சேவைகள் அனைத்தும் தமிழில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வணிக வரி செலுத்துவதற்கான போலி பட்டியல் தயாரிப்போர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் குற்றவியல் நடவடிக்கை எடுக்கும் புதிய சட்ட திருத்தும் கொண்டுவரப்படும் என கூறப்பட்டுள்ளது.
வணிக நல வாரிய உறுப்பினர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் நலத்திட்ட உதவிகளுடன் கூடுதலாக திருமண உதவி மற்றும் விபத்து இழப்பீட்டு தொகை வழங்கப்படும் என்றும் வருவாய் கிராமங்களுக்கு உட்பட்ட குக்கிராமங்கள் ஒரே சார் பதிவாளர் அலுவலக எல்லைக்குள் அமைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
பதிவு துறையில் கடந்த காலங்களில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், திங்கட்கிழமை தோறும் குறை தீர்க்கும் முகாம்கள் அமைக்கப்படும் என்றும் அமைச்சர் மூர்த்தி வெளியிட்டுள்ள 20 அறிவிப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஷ்மீர் : 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலுள்ள பயங்கரவாத முகாம்களை துல்லியமாக தாக்கியது. மே 7,…
டெல்லி : சிந்தூர் ஆபரேஷனை தொடர்ந்து இந்தியாவின் எல்லையோர மாநிலங்களில் பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், எல்லையோரங்களை சேர்ந்த…
இஸ்லாமாபாத் : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : விண்வெளி தொடர்பான உலகளாவிய மாநாடிற்காக பிரதமர் நரேந்திர மோடி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் இந்திய…
டெல்லி : இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்களில் இன்று அதிகாலை நடத்திய…
டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம்…