Former ADMK Minister Jayakumar [File Image]
விலைவாசி உயர்வால் தக்காளி சாதம் சாப்பிட முடியவில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்கள் மத்தியில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில் தக்காளி சாதம் சாப்பிடமுடியவில்லை என தக்காளி விலை உயர்வு குறித்தும் ஆளும் கட்சியை விமர்சித்தும் பல்வேறு கருத்துக்களை குறிப்பிட்டுள்ளார்.
அவர் கூறுகையில், நாளை சென்னையில் அதிமுக சார்பில் விலைவாசி உயர்வு, சட்ட ஒழுங்கு சீர்கேடு குறித்து ஆர்ப்பாட்டம் நடத்தபட உள்ளது. மேலும், மதுரையில் நடைபெற உள்ள அதிமுக மாநாடு குறித்த முக்கிய ஆலோசனை இன்று நடத்தப்படுகிறது என்று குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில், முதல்வருக்கு மேகதாது அணை பற்றியும் கவலையில்லை, மக்களைப் பற்றியும் கவலையில்லை. கைது செய்யப்பட்டு தற்போது சிறைவாசியாக இருக்கும் செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வது வீண் செலவு. என்று விமர்சித்தார்.
அடுத்ததாக, தக்காளி விலை உயர்வு காரணமாக எங்களால் தக்காளி சாதம் சாப்பிட முடியாமல் போய்விட்டது. என்றும் விலைவாசி பற்றி தனது கருத்தையும் கண்டனத்தையும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்து உள்ளார்.
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…
வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…
டெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும் ‘தி…