அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் வழக்கு… டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ்.!

அதிமுக பொதுச்செயலாளராக இபிஎஸ்-ஐ தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததை எதிர்த்த வழக்கில், டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ்.
அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை கடந்த 20-ஆம் தேதி தலைமை தேர்தல் ஆணையம் அங்கீகரித்து அறிவித்திருந்தது. முன்னதாக கர்நாடக சட்டமன்றத் தேர்தலை சுட்டிக்காட்டி தன்னை பொதுச்செயலாளராக அங்கீகரிக்க வேண்டும் என பழனிசாமியும், இபிஎஸ்-ஐ அங்கீகரிக்க கூடாது என்று ஓபிஎஸ் தரப்பில் தலைமை தேர்தல் ஆணையத்தில் முறையீடும் செய்யப்பட்டிருந்தது.
எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச்செயலாளராக தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததை எதிர்த்து, ஓபிஎஸ் தரப்பில் இருந்து ராம்குமார் ஆதித்தன் மற்றும் சுரேன் ஆகியோர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர். இந்த நிலையில் இந்த மனு குறித்து வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு 6 வாரத்தில் பதிலளிக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.