வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில்தான் கூட்டணி அமையும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ளது. இதற்காக தமிழகத்தில் உள்ள கட்சிகள் தயாராகி வருகின்றது.தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டும் ,கட்சி பொறுப்புகள் குறித்த அறிவிப்பும் அறிவித்து வருகின்றன.
இதனிடையே முதலமைச்சர் பழனிசாமி திருவாருரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவரிடம் , பாஜக தலைமையில் கூட்டணி என சொல்லப்படுகிறதே ? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்.இதற்கு பதில் அளித்த முதல்வர், தேர்தல் வரட்டும், கூட்டணியில் யார் என்பதே இன்னும் முடிவாகவில்லை.தேர்தல் வரும்போது தான் கூட்டணி பற்றியும் , தலைமை பற்றியும் முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
இந்நிலையில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்பொழுது அவர் கூறுகையில், வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில்தான் கூட்டணி அமையும். மக்களவை தேர்தலில் எப்படி கூட்டணி அமைத்தோ அதே போன்று தான் அமையும் என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : நேற்றைய ஐபிஎல் போட்டியில், சென்னை அணியை வீழ்த்தி பஞ்சாப் அபார வெற்றி பெற்றுள்ளது. முதலில் பேட்டிங் செய்த…
சென்னை : இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணியும், சென்னை அணியும் மோதியது. போட்டியில்…
சென்னை : கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், நாசர், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட…
சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று சேப்பாக்கம் மைதானத்தில்…
சென்னை : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…
சென்னை : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…