தமிழகத்தில் திருமண மண்டபம், விளையாட்டு மைதானங்களிலும் மது அருந்தலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கும் நிலையில், இதற்கு அரசியல் தலைவர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவன தலைவர் விஜயகாந்த் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
அது தொடர்பான அறிக்கை ஒன்றும் வெளியாகியுள்ளது. அறிக்கையில் விஜயகாந்த் கூறியதாவது. ” தமிழ்நாடு முழுவதும் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடைகளால் லட்சக்கணக்கான குடும்பங்கள் வறுமையில் தள்ளப்பட்டுள்ளனர். விபத்து மற்றும் மதுவால் ஏற்படும் உடல்நலக் குறைபாடுகளால் பலர் உயிரிழக்கிறார்கள்.
பள்ளி மாணவர்களும் போதை பழக்கத்திற்கு அடிமையாகி வருகின்றனர். இவ்வாறு தமிழகத்தில் அதிகரித்து வரும் போதை கலாச்சாரத்தை தடுக்காமல் தற்போது திருமண மண்டபம், விளையாட்டு மைதானங்களிலும் மது அருந்தலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்திருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.
திருமண மண்டபங்களில் மது அருந்த அனுமதிப்பது என்பது கலாச்சார சீரழிவை ஏற்படுத்தும். விளையாட்டு மைதானத்திலும் மது அருந்தினால் வன்முறை ஏற்படும். இதனால், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் பாதிக்கப்படும்.
அமைச்சர் செந்தில் பாலாஜி ஒருபுறம் தமிழகத்தில் இந்தாண்டு 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று கூறியிருந்த நிலையில், மற்றொரு புறம் திருமண மண்டபம், விளையாட்டு மைதானங்களில் மது அருந்த அனுமதி அளிப்பது யாரை ஏமாற்றும் செயல்..? இது தான் திராவிட மாடல் ஆட்சியா? சமூகத்திற்கு கேடு விளைவிக்கும் இந்த அறிவிப்பை தமிழக அரசு உடனடியாக திரும்பபெற வேண்டும்” என கூறியுள்ளார்.
தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட நான்கு நாள் வெளிநாட்டுப் பயணத்தை முடித்துவிட்டு, இன்று…
தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு பயணத்தை முடித்துவிட்டு, ஜூலை 26, 2025 அன்று மாலை 7:50 மணிக்கு…
தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு பயணத்தை முடித்துக்கொண்டு, ஜூலை 26 இன்று அன்று மாலை 7:50 மணிக்கு தூத்துக்குடி…
சென்னை : இன்றயை தலைமுறையினர் பலருக்கும் பேவரைட் இயக்குனராக மாறியிருக்கும் இயக்குனர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். இவர் கமல்ஹாசன், ரஜினி, விஜய்,…
மான்செஸ்டர் : இங்கிலாந்துக்கு எதிரான மான்செஸ்டரில் நடைபெறும் நான்காவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 23-27, 2025), இந்திய அணியின் இரண்டாவது…
அரியலூர் : பிரதமர் நரேந்திர மோடி, ஜூலை 27, 2025 அன்று அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரம் சோழீஸ்வரர் கோவிலுக்கு…