புதுச்சேரியில் ஜூன் 8 முதல் இவற்றையெல்லாம் திறக்கலாம் – முதல்வர் நாராயணசாமி

Published by
பாலா கலியமூர்த்தி

புதுச்சேரியில் ஜூன் 8 ஆம் தேதி முதல் வணிக வளாகங்கள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஜூன் 30 வரை 5 ஆம் கட்ட ஊரடங்கு தளர்வுகளுடன் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகம் 8 மண்டலமாக பிரிக்கப்பட்டு, அதற்கான தளர்வுகளை அளித்துள்ளது. அதன்படி, அரசு பேருந்து மற்றும் ரயில் சேவைகள் இன்று முதல் தொடங்கியுள்ளன. மேலும் சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. தொழில் நிறுவனங்கள், அனைத்து தனியார் நிறுவனங்கள் 100% பணியாளர்களுடன் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வணிக வளாகங்கள் தவிர்த்து பெரிய நகைக்கடை, ஜவுளிக்கடை போன்றவை 50% பணியாளர்களுடன் செயல்படலாம். டீ கடைகள், உணவு விடுதிகளில் ஜூன் 8 ஆம் தேதி முதல் அமர்ந்து உணவு அருந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், புதுச்சேரியில் ஜூன் 8-ம் தேதி முதல் மத வழிபாட்டுத் தளங்களை திறக்கலாம் என முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். ஜூன் 8 முதல் வணிக வளாகங்கள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுபோன்று உணவகங்களில் அமர்ந்து சாப்பிட அனுமதி என்றும் ஓட்டல்கள், நிறுவனங்கள் தனிநபர் இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் கூறியுள்ளார். மேலும் புதுச்சேரியில் தற்போது திரையரங்குகள், நீச்சல் குளங்கள் திறக்கப்படாது என்றும் கடற்கரை, பாரதி பூங்கா போன்றவைகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

13 hours ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

15 hours ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

19 hours ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

19 hours ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

21 hours ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

22 hours ago