சென்னை -திருச்சி நெடுஞ்சாலையில் செங்கல்பட்டு அருகே பரனூரில் சுங்கச்சாவடி அமைத்து உள்ளது.இந்த சுங்கச்சாவடி வழியாக திருச்சி சென்ற அரசு பேருந்து ஓட்டுனருக்கு , சுங்கச்சாவடி ஊழியருக்கு இடையே கட்டணம் செலுத்துவது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது.
அப்போது அந்த அரசு பேருந்து ஓட்டுநரையும் ,நடத்துநரையும் சுங்கச்சாவடி ஊழியர்கள் தாக்கியதாக தெரிகிறது.இதனால் ஆத்திரமடைந்த ஓட்டுநர் பேருந்தை சுங்கச்சாவடிக்கு குறுக்கே நிறுத்தி வைத்து உள்ளார்.இதைத்தொடர்ந்து அங்கு 3 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதித்ததால் நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் வரிசையில் நின்றது.
பின்னர் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் கோவத்தில் சுங்கச்சாவடியில் இருந்த கணினி உள்ளிட்ட மின்சாதன பொருள்களை அடித்து நொறுக்கினர்.இதனால் வாகனங்களுக்கு கட்டண வசூல் வசூலிக்காமல் இலவசமாக செல்ல அனுமதித்தனர்.
சுங்கச்சாவடி தாக்கப்பட்டதை தொடர்ந்து அங்கு நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.மேலும் இந்த மோதல் தொடர்பாக சுங்கச்சாவடி ஊழியரிடமும் , பயணிகள் சிலரிடம் போலீசார் விசாரணை நடைபெற்றது.
சென்னை : தமிழகத்தில் உள்ள எல்பிஜி கேஸ் சிலிண்டர் லாரி உரிமையாளர்கள், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOC) உள்ளிட்ட எண்ணெய்…
பத்தனம்திட்டா : சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று (ஜூலை 29, 2025) மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. தமிழகத்தில்…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று 29-07-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
புதுடெல்லி : ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து மக்களவையில் இன்று (ஜூலை 29) பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க…
சனா : ஏமன் சிறையில் உள்ள மலையாளி செவிலியர் நிமிஷா பிரியாவின் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டதாக இந்தியாவின் கிராண்ட்…
மதுரை : சாத்தான்குளம் காவல் நிலையத்தில் 2020-ல் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் காவலில் உயிரிழந்த வழக்கில், முதன்மை…