தேமுதிக, அமமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் மீண்டும் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுக – தேமுதிக கட்சிகள் இடையே பல கட்டங்களாக தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் தொடர்ந்து லுபாரி நீடித்து வந்தது. கூட்டணியில் தேமுதிக நீடிக்குமா? என்ற சந்தேகம் எழுந்து வந்த நிலையில், நேற்று சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் தலைவர் விஜயகாந்த் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.
இதன்பின், நாங்கள் கேட்ட தொகுதிகள், எண்ணிக்கைகள் அதிமுக தராததால் கூட்டணியில் விலகுவதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் பரபரப்பான சூழலில் அறிக்கையை வெளியிட்டிருந்தார். வரும் சட்டப்பேரவை தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியா? கூட்டணியா? என்று மீண்டும் மாவட்ட செய்யலாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு அறிவிப்பு வெளியாகும் என கூறப்பட்டது.
இதனிடையே, அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய தேமுதிக மக்கள் நீதி மய்யம் கூட்டணிக்கு வருமாறு அக்கட்சி துணை தலைவர் பொன்ராஜ் வேண்டுகோள் விடுத்திருந்தார். இதுகுறித்து விரைவில் தேமுதிக தலைவர், பொருளாளர் ஆகியோரை சந்தித்து பேசவுள்ளதாகவும் கூறியிருந்தார். இந்த சமயத்தில் தேமுதிகவை தொடர்புகொண்டு அமமுக கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக கூறப்பட்டது.
இந்நிலையில், தேமுதிக, அமமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் மீண்டும் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமமுகவின் பழனியப்பன், மாணிக்க ராஜாவுடன் தேமுதிக சார்பில் பார்த்தசாரதி, இளங்கோவன் பேசியதாக கூறப்படுகிறது. மேலும், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுடன் கூட்டணி தொடர்பாக எல்கே சுதீஷ் தொலைபேசியில் பேசியதாகவும் கூறப்படுகிறது.
எனவே, தேமுதிக கூட்டணியில் இணையுமா? அல்லது சட்டப்பேரவை தேர்தலில் தனித்து போட்டியிடுமா என்ற கேள்வி எழுந்திருக்கும் நிலையில், 140 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் இன்று தேமுதிக வெளியிடுகிறது என தகவல் கூறப்படுகிறது. மேலும் யாருடன் கூட்டணி மற்றும் தனித்து போட்டியிடுவது குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லி : உச்சநீதிமன்றத்தின் 52-வது தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாய் இன்று பதவியேற்றார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு…
சென்னை : 2025 ஆம் ஆண்டு +2 (12ஆம் வகுப்பு) பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கும், தனியாக தேர்வு எழுதியவர்களுக்கும்…
வாஷிங்டன் : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…