alleri [Imagesource : EVT Bharat]
பாம்பு கடித்து குழந்தை உயிரிழந்ததையடுத்து, அல்லேரி கிராமத்திற்கு ஆம்புலன்ஸ் வசதி
கடந்த மாதம் 29-ஆம் தேதி வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகிலுள்ள அத்திமரத்துக்கொல்லை மலைக்கிராமத்தில் பாம்பு கடித்த ஒன்றரை வயது குழந்தையை அணைக்கட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல சாலைவசதி இல்லாததால் உடல் முழுவதும் நஞ்சு பரவி வழியிலேயே உயிரிழந்துள்ளது.
இதனை தொடர்ந்து, உடற்கூறாய்வுக்குப் பிறகு அவசர ஊர்தியில் எடுத்துச் செல்லப்பட்ட குழந்தையின் உடல், சாலை வசதி இல்லாததால் பாதியில் இறக்கப்பட்டு, 10 கி.மீ தொலைவுக்கு பெற்றோரே நடந்து சுமந்து சென்றுள்ளனர்.
பச்சிளம் குழந்தை உயிரிழப்பையடுத்து, வேலூர் மாவட்ட ஆட்சியர் குமரவேல் அந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். வனத்துறையிடம் அனுமதி பெற்று மலை கிராமத்தில் சுமார் 6கிமீ சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மலை கிராமங்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுப்போம் என தெரிவித்த நிலையில், உடனடியாக சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டது.
இந்த நிலையில், பாம்பு கடித்து குழந்தை உயிரிழந்ததையடுத்து, அல்லேரி கிராமத்திற்கு ஆம்புலன்ஸ் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த ஆம்புலன்ஸ் 24 மணிநேரமும் அந்த கிராமத்திலேயே இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில்…
பிரான்ஸ் : நடிகர் மற்றும் ரேஸரான அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் ரேஸிங்கில் ஈடுப்பட்டு…
அமெரிக்கா : அமெரிக்கா வரி மற்றும் செலவீன குறைப்பு மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். மசோதா சட்டமானதால்…
அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…
சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக அரசு…
சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…