வேல் யாத்திரையால் சிக்கி தவித்த ஆம்புலன்ஸ் தங்களுக்காக வந்தது என்று எல்.முருகன் விளக்கமளித்துள்ளார்.
பாஜக சார்பில் திருத்தணி முதல் திருச்செந்தூர் வரை நவம்பர் 8 முதல் டிசம்பர் 6-ஆம் தேதி வரை வேல்யாத்திரை நடைபெறும் என்று அறிவித்த நிலையில் ,அதற்கு தமிழக அரசு தடை விதித்தது . ஆனால் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தலைமையில் கடந்த 6-ஆம் தேதி தமிழக அரசின் தடையை மீறி வேல்யாத்திரை நடத்தி திருத்தணியில் வைத்து போலீசார் கைது செய்து விட்டு அதன் பின்னர் விடுவிக்கப்பட்டனர் .
மேலும் இரண்டாவது தினமாக நேற்றைய தினமும் தடையை மீறி கோயம்பேட்டில் இருந்து திருவொற்றியூர் வரை எல்.முருகன் தலைமையில் வேல் யாத்திரை நடத்தினர் . வேல் யாத்திரையால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் 108 ஆம்புலன்ஸ் ஒன்று சிக்கி அவ்விடத்தில் இருந்து நகர முடியாமல் அரை மணியாக ஒரே இடத்தில் நின்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதனையடுத்து வேல்யாத்திரையில் கலந்து கொண்ட பாஜக தலைவர் எல்.முருகன் , கணேசன் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் அனைவரும் திருவொற்றியூரில் வைத்து கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், இன்றும் எல்.முருகன் தலைமையில் செங்கல்பட்டு மாவட்டத்திலிருந்து தொடங்கியுள்ளனர் . அப்போது செய்திகளை சந்தித்த பாஜக தலைவர் எல்.முருகன், வேல் யாத்திரையானது செங்கல்பட்டு மாவட்டத்தில் எனது தலைமையிலும், காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டையிலும் நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளார். அதனையடுத்து ஆம்புலன்ஸ் விவகாரம் குறித்து பேசிய எல்.முருகன் , அந்த ஆம்புலன்ஸ் தங்களுக்காக வந்தது என்றும், அது எங்களது ஆம்புலன்ஸ் என்றும் கூறியுள்ளார்.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…