[Image Source : Twitter/@CMOTamilnadu]
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்க அமெரிக்க நிறுவனங்களுக்கு முதலமைச்சர் அழைப்பு.
சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின் உடன் இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கர்செட்டி சந்தித்து பேசியுள்ளார். அப்போது, அடுத்தாண்டு ஜனவரி மாதத்தில் நடைபெற உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்க அமெரிக்க நிறுவனங்களுக்கு முதலமைச்சர் அழைப்பு விடுத்தார்.
இதன்பின் பேசிய முதலவர், அமெரிக்காவும் தமிழ்நாடும் வலுவான பொருளாதார உறவை பல ஆண்டுகளாக கொண்டுள்ளன. தமிழ்நாட்டில் தற்போது 400க்கும் மேற்பட்ட அமெரிக்க நிறுவனங்கள் இயங்கி வருகிறது. பல்வேறு புதிய அமெரிக்க நிறுவனங்களும் அண்மையில் தமிழ்நாட்டில் முதலீடு செய்துள்ளன.
அமெரிக்காவுடனான பொருளாதார உறவுகளை வலுப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்திய முதலமைச்சர், இந்தியாவின் முதல் 3 தொழில் மயமான மாநிலங்களுக்குள் தமிழ்நாடும் ஒன்று என தெரிவித்தார். தொழில் முதலீட்டுக்கு உகந்த மாநிலமாக ஆசியாவிலேயே முதல் 3 இடங்களில் ஒன்றாக தமிழ்நாட்டை மாற்றுவதே அரசின் நோக்கம் என்றும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் அமெரிக்கா ஒரு கூட்டு நாடாக இருக்க வேண்டும் எனவும் கூறினார்.
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் மோதலுக்கு மத்தியில், இந்திய பெண் விமானி சிவாங்கி சிங் பாகிஸ்தானில் பிடிபட்டதாக கூறப்படும்…
சென்னை : பஹல்காம் தாக்குதல் , ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு…
காஷ்மீர் : இந்தியாவின் எல்லை பகுதியில் நான்காவது நாளாக இன்று இந்தியா - பாகிஸ்தான் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.…
டெல்லி : பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் உறவுகளில் பெரும் விரிசல் ஏற்பட்டது. அது தற்போது இரு…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரிக்க…