su.venkadesan [imagesource :dtnext ]
அற்ப அரசியலுக்கு எதிரான போரில் கேரளத்துடன் தமிழகம் இணைந்து நிற்கும் என சு.வெங்கடேசன் எம்.பி ட்வீட்.
மோடி தலைமையிலான பா.ஜ.க.தான் கர்நாடகாவை பாதுகாக்க முடியும்; பக்கத்தில் கேரளா இருக்கிறது; அதற்கு மேல் சொல்ல விரும்பவில்லை” என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா மங்களூர் பேரணியில் பேசியுள்ளார். இதனையடுத்து சி பி எம் மாநிலங்களவை உறுப்பினர் ஜான் பிரிட்டாஸ் அமித்ஷாவின் உரைகுறித்து கட்டுரை எழுதியுள்ளார்.
இந்த நிலையில், ஜான் பிரிட்டாஸின் கூற்று தேச துரோகமானது என கேரள பாஜக செயலாளர் பி.சுதிர் மாநிலங்களவை தலைவர் ஜகதீப் தங்கர் அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். இதனையடுத்து, ஜான் பிரிட்டாஸ் அவர்களுக்கு “சம்மன்” அனுப்பப்பட்டு விசாரிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து சு.வெங்கடேசன் எம்.பி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அமித்ஷாவுக்கு பதிலளித்த ஜான் பிரிட்டாஸ் எம் பிக்கு சம்மன் – விசாரனை. “கர்நாடகத்தை அடுத்து கேரளம்” இருக்கிறது என எச்சரிக்கும் அமித்ஷா அவர்களே! மாநிலங்களின் சகோதரத்துவத்தை வாக்குவங்கிக்காக பலிகொடுத்தும் அற்ப அரசியலுக்கு எதிரான போரில் கேரளத்துடன் தமிழகம் இணைந்து நிற்கும். ஜனநாயகத்தை நேசிக்கிற ஒவ்வொருவரும் ஜான்பிரிட்டாஸுடன் இணைந்து நிற்போம்.’ என தெரிவித்துள்ளார்.
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…