அனிதா ராதாகிருஷ்ணன் மகன்கள் நீதிமன்றத்தில் ஆஜர்!

சொத்து வழக்கில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மகன்கள் தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்.
அதிமுக ஆட்சியின் போது வருமானத்துக்கு அதிகமாக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ரூ.4.90 கோடி சொத்து சேர்த்ததாக தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை கடந்த 2006ம் ஆண்டு வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த நிலையில், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மகன்கள் தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளனர்.
சொத்து குவிப்பு வழக்கில் தங்களையும் சேர்த்துக்கொள்ள கோரி அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனு மீது இன்று விசாரணை நடைபெறுகிறது. அனிதா ராதாகிருஷ்ணன் மீது மாநில லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த வழக்கை அடிப்படையாக வைத்து, 2020-ஆம் ஆண்டு சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்காக அமலாக்கத்துறை பதிவு செய்தது.
லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்கும் சொத்து குவிப்பு வழக்கு 80 சதவீத நிறைவடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த சூழலில், தங்களையும் சேர்த்துக்கொள்ள கோரி அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனு மீது இன்று விசாரணை நடைபெற உள்ள நிலையில், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மகன்கள் தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025