[File Image]
ஓய்வூதியதாரர்களுக்கு புகைப்படத்துடன் மருத்துவ காப்பீடு அடையாள அட்டையை வழங்க தமிழக அரசு உத்தரவு.
ஓய்வூதியதாரர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய மருத்துவ காப்பீடு அடையாள அட்டையை உடனடியாக வழங்கும் பணியை மேற்கொள்ள வேண்டும் என்று அனைத்து மாவட்ட கருவூல அதிகாரிகளுக்கும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பயனாளர்களுக்கு படிவம் வழங்கி அதற்குரிய ஒப்புகை சான்றை பெற்றுக்கொண்டு உடனடியாக பணியை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பான கடிதத்தில், ஓய்வூதியம் பெறுவோருக்கு மருத்துவ காப்பீடு அளிக்கும் திட்டத்துக்குக்காக கருவூலம் மற்றும் கணக்குத்துறையின் தரவு தளத்தில் இருந்து விவரங்கள் கொடுக்கப்பட்டு உரியவர்களுக்கு மருத்துவ காப்பீடு அடையாள அட்டை அளிக்கப்படுகிறது. இந்த நிலையில், அடையாள அட்டையில் பயனாளி மற்றும் துணைவரின் புகைப்படத்தை இணைக்க வேண்டும் என்று ஓய்வூதியதாரர்கள் சங்கங்கள் சார்பில் அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.
இதனடிப்படையில், ஓய்வூதியதாரர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டைகளை அளிப்பதற்கான படிவங்களை வழங்க முடிவு செய்யப்பட்டது. பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் தேசிய சுகாதார காப்பீட்டு திட்ட இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். அதன் பிறகு பயனாளிகள் தங்கள் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்து பயன்படுத்த முடியும் என்றுள்ளனர்.
மேலும், ஆண்டுதோறும் வாழ்வு சான்றிதழ் தர கருவூல அலுவலகத்திற்கு வருவோரிடம், அலுவலர்கள் படிவங்கள் அளித்து பூர்த்தி செய்து பெற வேண்டும் என உத்ராவிடப்பட்டுள்ளது. இந்த படிவங்கள் அடிப்படையில் அடையாள அட்டையில் ஓய்வூதியதாரர்களின் விவரங்கள் திருத்தப்படுவதுடன், புகைப்படங்களும் பதிவேற்றம் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…
வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கை அடைய…
பர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன்), இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்…
தூத்துக்குடி : சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஜூலை 6, 2025 காலை 10:10 மணிக்கு புறப்பட இருந்த ஸ்பைஸ்ஜெட்…