கடலூர் மாவட்டத்தில் உள்ள அக்ரா மங்கலத்தில் வசித்து வந்தவர் ஜெய ஸ்ரீ ஆவார்.இவர் புதுச்சேரியில் உள்ள அவரது உறவினர் வீட்டிற்கு சென்ற போது அருண் ராஜ் என்பவரிடம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
அது நாளடைவில் காதலாக மாற இரு வீட்டினரின் சம்மதத்துடன் 5 மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.இந்நிலையில் 5 மாதங்களில் ஜெய ஸ்ரீ கர்ப்பமான நிலையில் வளைகாப்பு நடத்த முடிவு செய்துள்ளனர்.
அப்போது வளைகாப்பு நிகழ்ச்சியில் அருண்ராஜ் வீட்டினர் ஜெய ஸ்ரீக்கு தங்க வளையல் போடுமாறு கூறியுள்ளனர்.ஆனால் நிகழ்ச்சியில் வளையல் போடாமல் இருந்ததால் இரண்டு வீட்டினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது ஜெய ஸ்ரீ-ன் சகோதரர்கள் அருண்ராஜை தாக்கியுள்ளனர்.பின்னர் இரண்டு வீட்டினரும் சமாதானம் ஆன நிலையில் அருண் ராஜ் வீட்டினர் ஜெய ஸ்ரீ -யை புதுவைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
பின்னர் சில நாட்கள் கழித்து ஜெய ஸ்ரீ தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரின் வீட்டினருக்கு தகவல் கிடைத்துள்ளது.இதன் அடிப்படையில் ஜெய ஸ்ரீ-ன் வீட்டினர் அருண்ராஜ் வீட்டுக்கு விரைந்து சென்றுள்ளனர்.
அங்கு ஜெய ஸ்ரீ சடலமாக தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்து கதறி அழத்தொடங்கியுள்ளனர்.இதனை தொடர்ந்து காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த காவல்துறையினர் ஜெய ஸ்ரீ-ன் சடலத்தை மீட்டுள்ளனர்.பின்னர் ஜெய ஸ்ரீ-ன் தாயார் தனது மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…