திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள அழகரை கல்லுப்பட்டி வடக்கு தெருவை சார்ந்த ரெங்கர் இவர் விவசாய கூலி தொழிலாளியாக உள்ளார்.இவர் நேற்று முன்தினம் இரவு தனது 15 மாத குழந்தையை கையில் வைத்து கொண்டு ஆனந்தன் என்பவரிடம் பேசிக்கொண்டு இருந்தார்.
அப்போது ரெங்கரின் உறவினர் செந்தில் என்பவர் ஆனந்தன் சட்டையில் இருந்த 70 ரூபாய் பணத்தை ஆனந்தனிடம் கேட்காமல் எடுத்தார். இதை தட்டி கேட்ட ரெங்கருக்கும் , செந்திலுக்கு இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.
அதில் ஆத்திரம் அடைந்த செந்தில் அருகில் இருந்த மூங்கில் கட்டையால் சரமாரியாக தாக்கினர். இதில் ரெங்கர் கையில் வைத்து இருந்த அவரது 15 மாத நித்தீஸ்வரன் என்ற குழந்தை மீதும் அடி விழுந்தது.இந்த சம்பவத்தில் காயம் அடைந்த இருவரையும் முசிறி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதில் நித்தீஸ்வரனுக்கு மேல் சிகிக்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.ஆனால் அங்கு சிகிக்சை பலன் இன்றி நித்தீஸ்வரன் இறந்தார்.இது குறித்து தொட்டியம் போலீசார் செந்திலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை : பஹல்காம் தாக்குதல் , ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு…
காஷ்மீர் : இந்தியாவின் எல்லை பகுதியில் நான்காவது நாளாக இன்று இந்தியா - பாகிஸ்தான் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.…
டெல்லி : பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் உறவுகளில் பெரும் விரிசல் ஏற்பட்டது. அது தற்போது இரு…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.…