பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டியின் ஜாமீன் மனு தள்ளுபடி!

Published by
பாலா கலியமூர்த்தி

பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டியின் ஜாமீன் மனுவை செங்கல்பட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கொடிக்கம்பம் விவகாரத்தில் பொது சொத்துக்களை சேதப்படுத்தியது தொடர்பான வழக்கில் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. சென்னை ஈசிஆர் பனையூரில் உள்ள பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வீட்டின் முன்பு பாஜக கொடிக்கம்பம் நிறுவப்பட்டது. இந்த கொடிக்கம்பம் அனுமதியின்றி வைக்கப்பட்டதாக அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, பாஜகவினரும் அப்பகுதியில் குவிந்து இருந்தனர். இதன்பின் வந்த காவல்துறை கொடிக்கம்பத்தை அகற்றி மாநகராட்சி வாகனத்தில் அனுப்பி வைத்தனர். இதையடுத்து, பாஜக முக்கிய நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக கானாத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனைத்தொடர்ந்து, கொடிக்கம்பம் தொடர்பான வழக்கில் பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில், பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டியின் ஜாமீன் மனுவை செங்கல்பட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. இதனிடையே, பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் மழை என்றதும் பதறும் காலம் மாறிவிட்டது.! முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு.!

இதில், ஒரு சில வழக்குகளில் நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. அதாவது, செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழா விளம்பர போஸ்ட்டரில் முதல்வர் புகைப்படத்தை அகற்றிவிட்டு பிரதமர் டத்தை ஒட்டியது தொடர்பாக அமர் பிரசாத் ரெட்டியை கோட்டூர்புரம் போலீசார் கைது செய்தனர். இதுபோன்று, போக்குவரத்து காவலரிடம் தகராறு செய்தது தொடர்பாக நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டு, அமர் பிரசாத் ரெட்டி கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் அமர் பிரசாத் ரெட்டிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் ‘என் மண் என் மக்கள்’ பாதயாத்திரை தென்காசியில் நடைபெற்ற போது, போலீசாருடன் வாக்குவாதம் செய்த அமர் பிரசாத் ரெட்டி மீது அங்கு வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டார். இந்த வழக்கிலும், பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டிக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி நெல்லை அம்பாசமுத்திரம் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது, கொடிக்கம்பம் தொடர்பான வழக்கில் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

“நான் எப்பவும் மக்களுடன்தான் பயணிக்கிறேன், நான்தான் முதலமைச்சர் வேட்பாளர்” – இபிஎஸ்.!

சென்னை : 2026 தேர்தல் சுற்றுப் பயணத்திற்கான இலச்சினை மற்றும் பாடலை சென்னை ராயப்பேட்டை எம்ஜிஆர் மாளிகையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர்…

3 minutes ago

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு .!

சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 2026…

22 minutes ago

பகுஜன் சமாஜ் கட்சி முன்னாள் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் நினைவு தின பேரணி!

சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு ஜூலை…

45 minutes ago

உக்ரைன் மீது ரஷ்யா மிகப் பெரிய தாக்குதல் வான்வழித் தாக்குதல்.!

கீவ் : ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே போர் மேலும் தீவிரமடையும் வாய்ப்பு உள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல்கள் அதிகரித்து…

59 minutes ago

இங்கிலாந்து அணி ஆல் அவுட்.., 3ம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 244 ரன்கள் முன்னிலை.!

பர்மிங்காம் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா அணி…

2 hours ago

தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவின் ரூ.34 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்.!

டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…

15 hours ago