100% தடுப்பூசி செலுத்தப்பட்ட கிராமமான, திருவாரூர் மாவட்டத்தில் உள்ள காட்டூர் கிராமத்தின் ஊராட்சி தலைவர் மற்றும் மாவட்ட ஆட்சியருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
தமிழக முதல்வராக பொறுப்பேற்ற பின் முதன்முறையாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், மறைந்த திமுக தலைவர் கருணாநிதி அவர்களின் பிறந்த ஊரான திருவாரூருக்கு நேற்று பயணம் மேற்கொண்டார்.
இந்நிலையில், திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ரூ.12 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பேறுகால அவசர சிகிச்சை மற்றும் சிசு தீவிர சிகிச்சை பராமரிப்பு மையத்தை வைத்தார். அதனை தொடர்ந்து, தமிழ்நாட்டிலேயே 100% தடுப்பூசி செலுத்தப்பட்ட கிராமமான, திருவாரூர் மாவட்டத்தில் உள்ள காட்டூர் கிராமத்தின் ஊராட்சி தலைவர் மற்றும் மாவட்ட ஆட்சியருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
இந்த நிகழ்வில், முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.
சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு, தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…
தஞ்சாவூர் : நேற்று (மே 5) இரவு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரத்தில் பெண் ஒருவர் தலை…
டெல்லி : பஹல்கால் தாக்குதலுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம்…
புதுக்கோட்டை : நேற்று (மே 5) புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வடகாடு பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவின்…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…